தற்கொலை எண்ணம் தலை தூக்கும் இளைஞர்களைக் காத்திட நாம் என்னென்ன செய்திட வேண்டும்?

பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துவிட்டு பொறியியல் மாணவர் ஷேக்முஹம்மது தற்கொலை! கல்லூரிக்கு கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் ஷேக்முகமது தற்கொலை செய்துகொண்டதாக தகவல்.


மதுரை தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் தெருவைச் சேர்ந் தவர் அபுதாகிர். தகரப் பட்டறை கூலித்தொழிலாளி. இவரது மகன் ஷேக்முஹம்மது (18). பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.இ. தகவல் தொழில்நுட்பம் படித்து வந்தார். சக மாணவர்களிடமும், வீட்டருகே உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகும் குணமுடைய இவர், தீபாவளியன்று அதிகாலை 2.10 மணிக்கு தனது பேஸ்புக் முகவரியில் ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு.’ என குறிப்பிட்டு நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், தீபாவளியன்று ஷேக்முகமது தந்தை அபுதாகிர், தாய் ஷகிலா பேகம், 8-ம் வகுப்பு படிக்கும் தங்கை ஹாஜிராபானு ஆகியோர் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அன்றைய பொழுதை நண்பர்களுடன் கழித்த ஷேக்முகமது இரவு வீட்டில் தனியாக இருந் துள்ளார். அப்போது, ரத்தக் கறைகளுடன் கூடிய ஒரு இளைஞர் ‘மன்னிக்கவும். நான் சாக விரும்புகிறேன்’ என்ற சுவரில் ரத்தத்தால் எழுதிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக் புரபைல் படமாக இரவு 10.12 மணிக்கு மாற்றம் செய்தார். மேலும் தன்னுடைய பெயருக்கு கீழே அதிர்ஷ்டமில்லாத நபர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதை நண்பர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 28 பேர் ‘லைக்’ கொடுத்துள்ளனர். அதன்பின் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் ஷேக்முகமது வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. செல் போன் அழைப்புக்கும் பதில் அளிக்கவில்லை. சந்தேகமடைந்த நண்பர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, சேலையால் தூக்கிட்ட நிலையில் ஷேக்முகமது தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. கல்லூரிக்கு கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் ஷேக்முகமது தற்கொலை செய்துகொண்டதாக கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என போலீஸார் விசாரிக்கின்றனர்

***


தற்கொலை எண்ணம் தலை தூக்கும் இளைஞர்களைக் காத்திட - தொலை நோக்குப் பார்வை ஒன்றுடன் - நாம் என்னென்ன செய்திட வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்ததில் கீழ்க்கண்ட முயற்சிகள் அனைத்தும் அவசியம் என என் அறிவுக்குப்பட்டது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

நமது இளைஞர்களைக் காக்க நாம் ஆற்றிட வேண்டிய அரும்பணிகள்:

வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைக் குறித்த புரிதலை உண்டாக்குதல் (Purpose of life)

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை உறுதிப் படுத்துதல் (Spirituality)

நிலைமை எதுவாயினும் – தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி என்பதனை நடைமுறையுடன் வழிகாட்டுதல் (Building Self Esteem with Self Confidence)

நற்பண்புகளுடன் கூடிய நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் (Ethics based Interpersonal Skills)

உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தல் (Developing Emotional Intelligence)

பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பு குறித்த தெளிவான வழிகாட்டுதலை வழங்குதல்

ஆசிரியர் - மாணவர் நல்லுறவை வளர்த்திட வகை செய்தல்

இளைஞர்களுக்கான சமூக அமைப்புகளை உருவாக்குதல் (Students Associations for Social Development)

மிக மிக நேர்மையுடனும் மனித நேயத்துடனும் களப்பணியாற்றக்கூடிய புதிய இளைய தலைவர்களை மாணவ மாணவியரிடமிருந்தே உருவாக்கப் பாடுபடுதல் (Highly Ethical and Responsible Student Leaders)

Comments