பேச்சாளர்களே! அழகாகப் பேசுங்கள்!

பேச்சாளர்களே! உங்களுக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து...

அன்பான ஒரு வேண்டுகோள்!

நீங்கள் பேசும்போது மக்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்!

அவர்களைப் பயப்படுத்தாதீர்கள்!


"நம்மால் இது முடியும்!" - என்று ஊக்குவியுங்கள்!

மக்களை நிராசையடைய வைத்து விடாதீர்கள்!

அல்லாஹ்வின் கருணையை, மன்னிக்கும் தன்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துங்கள்!

நமது பலவீனங்களையெல்லாம் அடுக்கிக் கொண்டே செல்லாதீர்கள்!

மக்களுக்கு இலகுவாக்குங்கள்! மார்க்கத்தைக் கஷ்டமான ஒரு விஷயமாக ஆக்கி விடாதீர்கள்!

"நாம் மட்டுமே மிகச் சரியாக இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம்!" என்ற ஆணவத்தை விதைக்காதீர்கள்!

"அல்லாஹ்வே மிக அறிந்தவன்!" - என்பதை மறந்து விடாதீர்கள்!

கருத்து மாறு படுவது உங்கள் உரிமை! அந்த உரிமை மற்ற சகோதரர்களுக்கும் உண்டு தானே!

உங்கள் கருத்தே சரி என்றால் இரண்டு மடங்கு கூலி உங்களுக்கு உண்டு தான்!

ஆனால் மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு ஒரு பங்கு கூலி உண்டு தானே!

மாற்றுக் கருத்தை உடையவர்களும் நமது சகோதரர்கள் தானே!

"இப்படி ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது!" என்று பேசவே வேண்டாம்! தயவு செய்து இதனை விட்டு விடுங்கள்!

நல்ல சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்; திட்டும் சொற்களைத் தவிர்த்து விடுங்கள்!

முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுபவர்களைக் கூட கெட்ட சொற்களால் வசை பாடாதீர்கள்!

ஏனெனில் நமது ஒரே ஒரு "சொல்" - நமது அனைத்து காரியங்களையும் கெடுத்து விடலாம்!

பேச்சாளர்களே! அழகாகப் பேசுங்கள்!

ஏனெனில் அல்லாஹ் மிக அழகானவன்! அல்லாஹ் அழகையே மிக விரும்புபவன்!

Comments