இது தானே நம் நிலைமை?

மனித குலத்துக்குப் பன்மைத் தன்மையை (PLURALISM) வழங்கியவனே

வல்லோன் அல்லாஹ் தான்!

ஏன் வழங்கப்பட்டது இந்தப் பன்மைத் தன்மை?

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக -

என்கிறான் வல்லோன் அல்லாஹ்.

THAT IS TO UNDERSTAND EACH OTHER!

ஏன் புரிந்து கொள்ள வேண்டும்?


ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் -

இருவருக்கும் இடையில் மதிப்பு (RESPECT) வரும்!

இருவருக்கும் இடையில் நம்பகத்தன்மை (TRUST) ஏற்படும்!

இருவருக்கும் இடையில் மனித குல சகோதரத்துவம் (HUMAN FRATERNITY) உண்டாகும்!

இப்படிப்பட்ட ஒரு பன்முகச் சமுதாயத்தில் "வளர்க்கப்படும்" குழந்தைகளுக்கு

தன்னம்பிக்கை (SELF CONFIDENCE) தானாக வரும்!

அவரவரும் முன்னேறிச் சென்று தம் பங்களிப்பை (CONTRIBUTION)

இவ்வுலகுக்கு வழங்குகின்ற சூழ்நிலை ஒன்று ஏற்படும்!

மனிதம் தழைக்கும்!

ஆனால் -

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால்

அல்லது புரிந்து கொள்ள மறுத்தால் -

மதிப்பு என்பது "நம் வட்டத்தில்" உள்ளவர்க்கு மட்டுமே என்றாகி விடும்!

நம்பகத்தன்மை அருகிப் போய் விடும்; சந்தேகப்பார்வை நீரூற்றி வளர்க்கப்படும்.

குழு விசுவாசம் (GROUP LOYALTY) மட்டுமே மேலோங்கி நிற்கும்.

இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகளுக்கு

தன்னம்பிக்கை வளராது! பய உணர்ச்சியே மிகைத்து நிற்கும்.

ஒதுங்கிச் சென்று விடுவார்கள்.

குறுகிய வட்டம் (GHETTOS) ஒன்றில் வாழக்கற்றுக் கொண்டு விடுவார்கள்.

அதனை நியாயப்படுத்தவும் செய்வார்கள்.

அவர்களிடம் திறமைகள் ஒளிந்திருக்கும்.

ஆனால் அவர்களால் இவ்வுலகுக்கு பங்களிக்க இயலாது.

மனிதம் புதைக்கப்பட்டு விடும்!

இது தானே நம் நிலைமை?

***

எனவே

எங்கிருந்து துவங்கலாம்?

வாருங்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம்!!

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு.  உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (குர்ஆன் 49:13)

Comments