குழந்தைகளைத் திருத்திட ஏழு அடிப்படைகள்!

1. எல்லாக் கெட்டப் பழக்கங்களும் - இடையில் வந்தவை தான். கற்றுக் கொள்ளப்பட்ட கெட்டப் பழக்க வழக்கங்களில் இருந்து குழந்தைகளை நிச்சயமாக காப்பாற்றிட முடியும் என்ற நம்பிக்கை அவசியம்.

2. குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்; எல்லாம் தானாகவே சரியாகப் போய்விடும் என்பது முற்றிலும் தவறு.

3. குழந்தைகளைத் திருத்துவதில் பெற்றோருக்கு தொடர்படியான உறுதி தேவை. அரைகுறை முயற்சி பலன் தராது. ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது. பொறுமை தேவை. தொடர்ந்த பயிற்சி அவசியம்.

4. ஒன்றைச் செய்யாதே என்று சொல்லும் போது, அதற்கு பதிலாக இதனைச் செய் என்று நல்ல ஒன்றின் பக்கம் குழந்தைகளின் கவனத்தைத் திருப்பிட வேண்டும்.

5. பெற்றவர்கள் முன்மாதிரி அவசியம். நமது "சொற்கள்" பயன் அளிக்காது; நமது "செயல்களே" பயன் தரும்.

6. நல்லதொரு பழக்கத்துக்கு குழந்தைகள் மாறிடும்போது அவர்களைப் பாராட்டிட வேண்டும். அவர்களை  ஊக்கப் படுத்துவதும் அவசியம்.

7. எந்த வயதிலும் திருத்திட முடியும்.  இனி மேல் எங்கே திருந்தப் போகிறார்கள் என்று விட்டு விடத் தேவையில்லை!

தொடர்ந்து சிந்திப்போம் - இன்ஷா அல்லாஹ்!

Comments