இதயத்தில் இடம் கொடு!

நான் மத்ஹபைப் பின்பற்றுபவனா என்று நீ பார்க்க வேண்டாம்!
"நீ தவ்ஹீதா? ஸலஃபியா?" - என்று என்னைக் கேட்கவும் வேண்டாம்!
தரீக்காவா? தப்லீக்கா? என்ற ஆராய்ச்சியும் வேண்டாம்!
"இவன் இந்த இயக்கம்!" - என்று எனக்கு முத்திரை குத்தவும் வேண்டாம்!


அப்படியானால் நான் யார்?
நான் கலிமா சொல்லி விட்ட ஒரு முஸ்லிம்!
அவ்வளவே!
எனவே உன் இதயத்தில் எனக்கு இடம் கொடு!
உன்னை சந்தித்தால் நான் உனக்கு சலாம் சொல்வேன்!
என்னை சந்தித்தால் - நீ எனக்கு சலாம் சொல்!
எனக்குப் புன்முறுவல் முகம் காட்டு!
நான் கை நீட்டினால் - நீயும் கை கொடு!
நான் நோயுற்றால் - வந்து என்னைப்பார்!
நான் உன்னை விருந்துக்கு அழைத்தால் - தயங்காமல் ஏற்றுக் கொள்!
இதில் எதுவும் உனக்கு உடன்பாடு இல்லையா?
அப்படியானால் உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள்:
குறைந்த பட்சம் - நான் இறந்து விட்டால் -
என் ஜனாஸாவையேனும் பின் தொடர மறந்து விடாதே!
ஏனெனில் - நான் கலிமா சொல்லி விட்ட ஒரு முஸ்லிம்!

Comments