பொய் சொல்லி அழைப்புப்பணியா?

ஒரு இஸ்லாமிய அழைப்பாளரின் கேள்வி பதில் வீடியோ அது.
முஸ்லிம் அல்லாத சகோதரர் ஒருவர் கேள்வி கேட்டிட அதற்கு அந்த அழைப்பாளர் பதில் தருகிறார்.
அந்த வீடியோவை சமூக வலை தளத்தில் ஏற்றி வைப்பவர் - அதற்குக் கொடுத்த தலைப்பு ஒரு பொய்யான தலைப்பு.


தலைப்பு என்ன?
இஸ்லாமிய அழைப்பாளர் - இன்னார் - ஆமிர்கான் திரைப்படத்தைப் பற்றிக்கூறும் அறிவுப்பூர்வமான பதில்!
ஆனால் அந்த் வீடியோ பதிவில் அப்படி ஒன்றும் இல்லை!
கமென்ட் பகுதியில் ஒரு சிலர் இது பற்றி கேட்டும் இருக்கின்றார்கள். இதோ ஒரு கமென்ட்:
"வீடியோ வேறு. தலைப்பு வேறு. அந்த அறிஞர் ஆமிர் கானைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை."
***
நாம் கேட்பது இது தான்:
இது ஏமாற்று வேலை தானே?
பொய் சொல்லி அழைப்புப்பணியா?
Forgetting ethics and doing Dawah???
இதில் வேடிக்கை என்னவென்றால் - இந்த வீடியோவை - லட்சக்கணக்கானவர்கள் பார்த்திருக்கிறார்கள்!
நம்மைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?

Comments