முகநூல் செய்திகளை பகிர்வதற்கு முன் - ஒரு நிமிடம்...

சமூக வாழ்வில் கடைபிடித்திட வேண்டிய "பண்புகளை" வல்லோன் இறைவன் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றான்.
அப்பண்புகள் (Islamic Social Ethics) குறித்த அடிப்படை விஷயங்களை முகநூல் போன்ற சமூக வலை தளங்களைப் பயன்படுத்துவோர் அறிந்து பின்பற்றிட வேண்டியது மிக மிக அவசியம். இது குறித்த ஆழமான கருத்து பரிமாற்றம் ஒன்று தேவைப்படும் காலம் இது.
இப்போது முகநூல் செய்திகளைப் பகிர்வது குறித்து சில ஆலோசனைகள்:


முகநூல் செய்திகளை பகிர்வதற்கு முன் - நம்மை நாமே பின் வரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் என எண்ணுகிறேன்.
அ. ஏன் இதனை நாம் பகிர வேண்டும்? இதன் அவசியம் என்ன? என்னுடைய நிய்யத் (எண்ணம்) என்ன? இதனால் எனக்கு என் இறைவனிடத்தில் நன்மை கிடைக்குமா? இதில் ஏதாவது பாவம் இருந்திட வாய்ப்பிருக்கிறதா?
ஆ. நமக்கு வந்துள்ள செய்தியின் நம்பகத்தன்மை எத்தகையது? இதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? இதனைப் பகிர்வதால் "ஒன்றுமறியாதவர்" (innocent) எவராவது பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா?
இரண்டு குர்ஆன் வசனங்கள் உங்கள் சிந்தனைக்காக:
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(குர்ஆன் 5:2)
முஃமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக ஆவீர்கள். (குர்ஆன் 49:6)

Comments