துணிவு என்பது ஒரு இஸ்லாமியப் பண்பு!

நமது பலவீனங்களையும், குறைகளையும் ஏற்றுக் கொண்டு அவைகளைத் திருத்திக் கொள்ள முனைவது தான்
துணிவின் துவக்கம்!


நமக்கு என்ன நேரிடினும் -
நமது இலட்சியத்தை பாதியிலேயே விட்டு விடாமல் தொடர்வது தான்
நமது துணிவின் பயணம்!

நமக்கு முன் நிற்பவர் யாரெனினும்
உண்மையை உறுதியாக ஆனால்
மென்மையாக உரைத்தலே
துணிவின் சிகரம்!

வலக்கரத்தில் சூரியனையும் இடக்கரத்தில் சந்திரனையும் வைத்தால் கூட
எனக்கிடப்பட்ட இறைக் கட்டளையை நான் நிறைவேற்றியெ தீருவேன்!
ஒன்று - இந்த இலட்சியத்தில் நான் வெற்றி பெற வேண்டும்!
அல்லது இந்த இலட்சியப்பாதையில் நான் மரணித்து விட வேண்டும்!
என்று அண்ணலார் சொன்னது - அதுவே - துணிவுக்கு இலக்கணம்!

Comments