முஸ்லிம்கள் மென்மையாக நடந்து கொள்வதில்லையே, ஏன்?

மென்மையும் ஓர் இஸ்லாமியப் பண்பு தான்!

முஹம்மத் நபி (ஸல்) சொல்கிறார்கள்: இறைவன் மென்மையானவன்.
அவன் மென்மையை மிகவும் விரும்புபவன்!

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரளி)


(அரபியில்: இன்னல்லாஹ ரஃபீகுன் வ யுஹிப்புர் - ரிஃப்க்)

ரிஃப்க் எனும் சொல்லிலிருந்து பிரிகின்ற இன்னொரு சொல் தான் ரஃபீக்.

ஆனால் ரஃபீக் என்பதன் பொருள் என்ன தெரியுமா?

நண்பன்!!!

நபி (ஸல்) தமது மரண தருவாயில் இறைவனைப் பற்றி - அவன் ரஃபீக்குல் அஃலா - உயர்ந்த நண்பன்! என்று குறிப்பிட்டார்கள்.

ரிஃப்க் என்றால் மென்மை!
ரஃபீக் என்றால் நண்பன்!

அப்படியானால் மென்மையானவனே சிறந்த நண்பனாக ஆக முடியும்! மென்மையாக நடந்து கொண்டால் தான் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்!

மென்மை இல்லாவிட்டால் நண்பர்கள் நம்மிடமிருந்து வெருண்டோடி விடுவார்கள் (பார்க்க அல்-குர்ஆன் 3: 159)

கவனியுங்கள்! இன்று soft skill குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது! எதற்காக? மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ள! அதாவது  to develop interpersonal skill!

ஆனால் மென்மையையும் நட்பையும் சேர்த்துச் சொல்லி - இஸ்லாம் என்றோ இதனைக் கற்றுக் கொடுத்து விட்டது!

ஆனால் - மில்லியன் டாலர் கேள்வி என்னவெனில் - முஸ்லிம்கள் மென்மையாக நடந்து கொள்வதில்லையே, ஏன்? 

Comments