இது ஏன் எங்களுக்குச் சொல்லித்தரப்படவில்லை?

அயர்லாந்து எனும் நாடு!

இங்கிலாந்துக்கு மேற்கே! மிக அருகே!

கி.பி 1845

அப்போது அங்கே கடும் பஞ்சம் தலை விரித்தாடுகிறது!

பஞ்சத்தால் இறந்தவர்கள் மட்டும் பத்து லட்சத்துக்கும் மேல்!

இன்னொரு பத்து லட்சம் பேர் - பஞ்சத்திலிருந்து தப்பிக்க
நாடு துறந்து வெளியேறி விட்ட அவலம்!

ஆனால் - 4000 கி.மீட்டருக்கு அப்பால் ஒரு நாடு!

துருக்கி.


அதன் ஆட்சியாளர் - அப்துல் மஜீத் I

ஒரு 10000 பவுண்டுகள் - அயர்லாந்து மக்களுக்கு உதவித் தொகையாக அனுப்பி வைக்கப்போவதாக அறிவிக்கிறார் அப்துல் மஜீத்!

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் -  கிபி 1845 - ல் 10000 பவுண்டுகள் என்றால் இன்று அதன் மதிப்பு எட்டு லட்சம் பவுண்டுகள் ஆகும். அதாவது $1,683,000 US டாலர்கள் ஆகும்.

"அவ்வளவு வேண்டாம்! நாங்களே 2000 பவுண்டுகள் தான் கொடுத்துள்ளோம்;
நீங்கள் வேண்டுமானால் ஒரு 1000 பவுண்டுகள் மட்டும் கொடுத்தனுப்புங்கள்!" - என்று
இங்கிலாந்து மகாராணி செய்தி அனுப்பி விடுகிறார் துருக்கி அரசருக்கு!

மகாராணியின் வேண்டுகோளை ஏற்று - 1000 பவுண்டுகளை அயர்லாந்துக்கு அனுப்பி வைக்கிறார் துருக்கி அரசர்.

ஆனால் பணம் அனுப்பி வைப்பதுடன் நின்று விடவில்லை அவர். அத்துடன் மூன்று கப்பல்கள் நிறைய உணவுப்பொருட்களையும் அனுப்பி வைக்கிறார் - இரகசியமாக!

தடுத்து விடுகிறார்கள் ஆங்கிலேயர்கள்!  துறைமுகங்கள் மறுத்து விடுகின்றன உணவுப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு.

விடவில்லை துருக்கிக் கப்பலில் உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தவர்கள்! ட்ரோகெடா (Drogheda) எனும் ஒரு சிறிய துறைமுகத்தில் போய் உணவுப் பொருட்களை இரகசியமாக இறக்கி வைத்து விட்டு வந்து விடுகிறார்கள் கப்பலை வழி நடத்தியவர்கள்!

நன்றி சொன்னார்கள் அயர்லாந்து மக்களும், மக்கள் பிரதிநிதிகளும்!

இது வரலாறு! கதை அல்ல!

இந்தச்செய்தியைப் படித்த ஆங்கிலேயர் ஒருவர் (Paul Scally) இப்போது கேட்கிறார்:

"இது ஏன் பள்ளிக்கூடங்களில் வரலாற்றுப்பாடத்தில் எங்களுக்குச் சொல்லித் தரப்படவில்லை? கிருத்துவப் பண்பு அதற்கு இடம் கொடுக்கவில்லையா?"

மேலும் படித்துப்பாருங்கள்:

http://ilmfeed.com/when-the-islamic-state-came-to-irelands-aid/#arvlbdata

Comments