அமைதி! - ஓர் அழகிய இஸ்லாமியப் பண்பு!

இறைவனின் அழகிய பெயர்களுள் ஒன்று தான் -
அஸ்-ஸலாம்!
ஆம்! அமைதியின் ஊற்று - அவன் ஒருவனே தான்!

இறைவன் அங்கீகரித்திட்ட மார்க்கம் - தீனுல் இஸ்லாம்!
இஸ்லாம் என்பதன் பொருள்
அமைதி மார்க்கம் என்பதாம்!
நமக்கெல்லாம் முஸ்லிம்கள் என்று பெயரிட்டவர்
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள்!
முஸ்லிம் என்றால் - அமைதியானவன் என்று பொருள்!

எனவே முஸ்லிம் என்பவன்
பதற்றப்படுபவனும் அல்ல!
பயப்படுத்துபவனும் அல்ல!

அண்ணல் நபியவர்கள்
மதினா வந்தடைந்ததும் செய்த முதல் உபதேசம்:
ஸலாத்தினைப் பரப்புங்கள் என்பதே! (அஃபுஸ்-ஸலாம்)
அதாவது அமைதியைப் பரப்புங்கள் என்பது தான் 
அண்ணலாரின் அன்புக் கட்டளை!
ஆம்! இவ்வுலகில் நமது பணியெல்லாம்
அமைதியை பரப்புவது மட்டும் தான்!

நமது இறுதி இலக்கு இறைவன் மறுமையில்
நமக்கு வழங்கும் சுவனபதியாகும்!
அதன் பெயர் என்ன தெரியுமா?
அது தான் தாருஸ்-ஸலாம்!
அமைதி இல்லம்!!!

நாம் அனைவரும் இறைவனிடமிருந்தே வந்தோம்!
அவனிடமே நாம்
திரும்பச் செல்பவர்களாக இருக்கின்றோம்!
என்னிடத்தில்
அமைதியான இதயத்துடன் (கல்பின் ஸலீம்) வாருங்கள்
என்பதுவும் இறை கட்டளையே!

இதயம் எப்போது அமைதி பெறும்?

ஸலாமத் எனும் சொல்லின் வேர்ச்சொல்லான
ஸலிம என்பதன் பொருள் -
மனப்பூர்வமாக தன்னை இறைவனிடம் ஒப்படைத்து விடுதல் என்பதாம்!
ஆங்கிலத்தில் சொல்வதானால் -
Whole-hearted self giving!
அதாவது இறைவனிடத்தில்
நம்மை ஒப்படைத்து விட்டால்
அமைதி தானாக நம்மை வந்தடையும்!

இதனை நாம் யாரிடத்தில் கற்றுக் கொள்ளலாம்?
நபி இப்ராஹிம் அவர்களிடத்திலும்
நாம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும்!
நம் அண்ணல் நபியவர்களிடமிருந்தும்
நாம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும்!

ஆனால் - இன்றைய முஸ்லிம்களாகிய நம் நிலை என்ன?

Comments