வெற்றிக்குத் தேவையான அனைத்தும் தொழுகையில்!

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எல்லா அம்சங்களும் தொழுகையோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது!

தொழுகை ஒரு சடங்கு அல்ல! அது நமது அன்றாட வாழ்க்கை முழுவதுடனும் பின்னிப் பிணைந்ததொரு அற்புதமான ஒரு வணக்க வழிபாடு!

அல்லாஹு தஆலா நமது வாழ்க்கையோடு தொழுகையை எந்த அளவு பின்னிப் பிணைத்திருக்கின்றான் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போமா?


சான்றாக – தொழுகையுடன் சுத்தம் இணைந்துள்ளது. உளூ இல்லாமல் தொழ முடியாது. இடம் சுத்தம், உடை சுத்தம், உடல் சுத்தம் அவசியம். சுத்தம் வெற்றி தருமா தராதா?

தொழுகை – நேரத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. நேரத்தைப் பேணுபவர்கள் வெற்றி பெறுவார்களா மாட்டார்களா?

தொழுகை – நல்லொழுக்கத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த நல்லொழுக்கம் வெற்றியைத் தருமா தராதா?

தொழுகை – பொறுமையுடன் இணைக்கப் பட்டுள்ளது. பொறுமையாளர்கள் வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா?

தொழுகை – ஜகாத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. தர்மம் நமக்கு வெற்றியைத் தருமா தராதா?

தொழுகை – ஒற்றுமையைக் கற்றுத்தருகிறது. வெற்றிக்கு – ஒற்றுமை அவசியமா? இல்லையா?

தொழுகை – தலைமைக்குக் கட்டுப் படுவதன் அவசியத்தைக் கற்றுத்தருகிறது. வெற்றிக்கு – தலைமைக்குக் கட்டுப் படுவது அவசியமா? இல்லையா?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்....

இன்ஷா அல்லாஹ் - இனி மனித வாழ்வின் வெற்றிக்குத் தேவையான ஒவ்வொரு அம்சத்தையும் தொழுகை

எவ்வாறு தனக்குள் பிணைத்து வைத்துள்ளது என்பதை ஒவ்வொன்றாக அலசுவோம்.

Comments