பயிலரங்கம் குறித்து ஒரு சகோதரரின் கருத்து

27 - 09 - 2015 அன்று நெய்வேலி AIMMEWA ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட - S A மன்சூர் அலி அவர்களின் "உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?" எனும் ஒரு நாள் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட ஒரு சகோதரரின் கருத்து.
அல்ஹம்துலில்லாஹ்! உணர்வுகளினால் தூண்டப்பட்டு, உணர்ச்சி வயப்பட்டு, மதியிழந்து, சிந்திக்க இயலாமல் செயல்படும்போது தான் மோசமான விளைவுகள் நிகழ்கின்றன என்பதையும், உடனடியான தீர்வுகளும் முடிவுகளும் பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும் என்பதையும், பிரச்னைகளை களைவதற்கு பாதிக்கப்பட்டவரின் மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும் என்பதையும் Group Discussion மூலமாகவும் முடிவில் தன் உரையில் உதாரணங்கள் மூலமாகவும் சிறப்பாக தெளிவாக்கியமைக்கு வல்ல நாயனுக்கு நன்றி கூறுகிறேன்." 

Comments