தொழுகை - பயிலரங்கம்: 003 - கருத்துகள்

Feedback: Success Through Salat Workshop No: 003
-----------------------------------------------------------------------

தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி - பயிலரங்கம் - 003 கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் அறிவியல் கலைக் கல்லூரியில் கடந்த 20 - 12 - 2015 அன்று - நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

நீங்கள் பயிற்றுவித்த விதம் எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு மிக அழகாக கற்றுக் கொடுத்தீர்கள்.

இப்பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது. தொழுகை என்பது என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. தொழுகை வாழ்க்கையுடன் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதை புரிய வைத்தது. இந்த பயிலரங்கம் நடத்துவதற்கு ஒரு நாள் போதவில்லை.

நீங்கள் சொன்ன கருத்துக்கள் புதிதாக இருந்தது. இது போன்று ஒரு பயிலரங்கத்தைத் தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் இவ்வளவு நாட்கள் தொழுகையை லேசாக நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தான் தொழுகையை பற்றி விரிவாய் உணர்ந்தேன். தொழுகையை இனி விட மாட்டேன்.

Comments