தனி மனித தலைமைத்துவம்! - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்

FEEDBACK ON PERSONAL LEADERSHIP - WORKSHOP
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக "தனி மனித தலைமைத்துவம்" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:

அல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.


இந்த வகுப்பில் கலந்து கொண்ட பின் தலைமைத்துவம் என்பது என்ன? தலைவன் என்பவன் யார்? தலைமை பொறுப்பை ஏற்க என்ன என்ன திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொண்டேன். அல்லாஹ் உங்களுடைய இந்த சேவையை மென்மேலும் பல ஆலிம்களுக்கும் தலைவர்களுக்கும் கொண்டு சேர்ப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அல்ஹம்து லில்லாஹ். இன்றைய இந்த நாளில் இறைவன் எனக்கு அளித்த ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப்பாடம் என்றே கூறுவேன்.... கூச்ச சுபாவம், என்னை நானே எந்த விஷயத்தையும் செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையும் உள்ளத்தில் ஒரு விதமான பயமும் கொண்டவனாக (இருந்தேன்). ஆனால்... இன்று தங்களை அல்லாஹு தஆலா எனக்காகவே அனுப்பியுள்ளான் என்றே நம்புகிறேன். உன்னால் முடியும், உன்னால் முடியாவிட்டால் அல்லாஹ்வின் பெயரோடு செய்தால் முடியும் என்று சொன்ன போது கண்டிப்பாக அல்லாஹ்வின் உதவியால் இனிமேலும் என்னால் முடியும் என்ற நம்பிக்கை உறுதி ஏற்பட்டுள்ளது.

என்னுடைய வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எண்ணுகிறேன்.

Comments