முஸ்லிமாக மாறாமல் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள என்ன வழி?

அழைப்புப் பணி என்பது பின் வரும் நான்கு அடிப்படை நிபந்தனைகளை (BASIC REQUIREMENTS) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

ஒன்று: ஹிக்மத் - விவேகம் (PRACTICAL WISDOM)  (16:125)

இரண்டு: மவ்-இலத்தில் ஹஸனா - மிக அழகான உபதேசம் (KIND ADVICE / HEART TOUCHING COUNSELING) மற்றும் அழகிய முறையில் மட்டும் விவாதம் (16:125)



மூன்று: ஃகுலுகின் அளீம் - மகத்தான நற்பண்புகள் (EXEMPLARY CHARACTER) (68:4 - நபியவர்களின் மக்கத்து நபித்துவ வாழ்வின் துவக்கத்தில் இறக்கப்பட்ட வசனம் இது)

நான்கு: ரஹ்மத் - மனிதர்களிடத்தில் இரக்கமும் கருணையும் (MERCIFUL LOVE FOR PEOPLE) (21:107)

இந்த நான்கில் எந்த ஒன்றுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தான் நாம் அழைப்புப்பணி செய்து கொண்டிருக்கிறோம்.

இறைத்தூதர்களின் அழைப்பை ஏற்காததோடு, "உங்களை கல்லால் எறிந்து கொன்று விடுவோம், அல்லது ஊரை விட்டு உங்களை வெளியேற்றி விடுவோம், என்பன போன்ற எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையே அல்லாஹ் "காஃபிர்கள் - நிராகரிப்பவர்கள்" - என்று அழைக்கிறான்.

ஆனால் நம்மிடத்தில் விவேகமும் இல்லை; இதயத்தைத் தொடும் உபதேசமும் இல்லை; மகத்தான குணமும் நம்மிடம் இல்லை; மக்களிடத்திலே இரக்கம் உடையவர்கள் என்றெல்லாம் பெயர் எடுக்கவும் இல்லை!

இந்நிலையில் - நமது வரட்டுத்தனமான "அழைப்புப் பணியை" ஏற்காதவர்களை - எந்த வகையில் நாம் காஃபிர்கள் என்று முடிவு கட்ட முடியும்?

நம்முடைய அழைப்பை ஏற்காதவர்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம்:

ஒரே ஒரு காரணத்தை மட்டும் இங்கே சொல்வது பொருத்தம்.

ஒருவர் கேட்டாராம்:

How can I accept Islam without becoming a Muslim?

முஸ்லிமாக மாறாமல் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள என்ன வழி?

Comments