உண்மைப் பொருள் அறிவோம்!

REALITY – என்பது ஒரு ஆங்கிலச் சொல். இந்தச் சொல்லின் பூர்விகம் இலத்தீன் மொழியாகும். இலத்தீன் மொழியில் RES என்றால் THING என்று பொருள். அந்தச் சொல்லே பின்னர் REALIS என்று மாறுகிறது. அதன் பிறகே இச்சொல் ஆங்கிலத்துக்கு வருகிறது – REALITY என்ற சொல்லாக சற்றே உருமாறி!

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் – REALITY – என்பது நம் கண்களுக்கு முன்னால் உள்ள ஒரு “பொருளுடன்” (real objects) சம்பந்தப்படுத்தப் பட்டுள்ளது!


அதாவது ஒரு பொருள் – “அது இருப்பது உண்மை தான்” (having verifiable existence) என்று சரிபார்த்துச் சொல்லப்படும் போது அது REALITY ஆகின்றது.

அப்படியானால் – இந்த REALITY – எனும் சொல்லிலேயே பொருள்முதல் வாதம் (MATERIALISM) பொதிந்திருக்கிறதா இல்லையா?

இப்போது அரபி மொழிக்கு வருவோம்.

“ஹகீகத்” - என்பது ஒரு அரபிச் சொல். இந்தச் சொல்லின் மூலச்சொல் “ஹக்” என்பதாகும். இச்சொல்லை உண்மை, சத்தியம் என்று மொழிபெயர்க்கிறார்கள். ஆங்கிலத்தில் REALITY என்றும் மொழிபெயர்க்கலாம்.

ஆனால், இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் “அல்-ஹக்” என்பது இறைவனின் 99 திருநாமங்களில் ஒன்றாகும்!

அப்படியானால், இந்த ஹகீகத் எனும் சொல்லிலேயே ஆன்மிகம் (SPIRITUALISM) ஒன்று பொதிந்திருக்கிறதா இல்லையா?

மற்ற மொழிகளுக்கும் அரபி மொழிக்கும் உள்ள வேறுபாடு இது தான்!

மற்றவை, உங்களின் ஆழமான சிந்தனைக்கு…

இந்த அடிப்படையில் நான் கேள்வி ஒன்றைக் கேட்கிறேன் ஆங்கிலத்தில்:

IS GOD REAL?

(கருத்து: ஷெய்ஃக் ஹம்ஸா யூசுஃப் அவர்கள்)

Comments