பணிவே முதல் பாடம்

ஆணவம் மிகைத்து விட்டால்
அத்தாட்சிகள் கண்ணுக்குத் தெரியாது!

அத்தாட்சிகளைக் காண இயலாவிட்டால்
அல்லாஹ்வை உணர்ந்து கொள்ள முடியாது!

அல்லாஹ்வை உணர்ந்து கொள்ள இயலாவிட்டால்
அகீதாவைப் புரிந்து கொள்ள முடியாது!

அப்படியிருக்க...

தலைக்கணம் மிகைத்து விட்டால்
அகீதா எப்படி தலைக்கேறும்?


இப்போது படித்துச் சிந்தியுங்கள்:

"எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் அத்தாட்சிகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்;

"அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்;

"அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;

"ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்;

"ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள். (குர் ஆன் 7: 146)

இமாம் ஜுனைது அவர்கள் சொல்கிறார்கள்:

"அகீதாவைப் படிக்கு முன்
ஆணவத்திலிருந்து விடுபடுங்கள் முதலில்!"

எனவே

பணிவே முதல் பாடம்
பணிவிலிருந்தே அறிவு தொடங்குகிறது

Comments