குர்ஆனும் நாகரிகமும்

குர்ஆன் எனும் சொல்லின் இரண்டு மூலங்களில் ஒன்றான - 'க்கர்ர' என்பதன் பொருள் - ஆங்கிலத்தில் - to settle down, established, to become sedentary என்று தான் வருகின்றது. 

தமிழில் இதனை ஒரு இடத்தில் தங்குதல், தங்கி வசித்தல் என்றும் மொழிபெயர்க்கலாம். 

ஒரு மனித சமூகம் ஒரு இடத்தில் தங்கி வசிக்கும்போதே நாகரிகம் ஒன்று பிறக்கின்றது. 

இந்த அடிப்படையில் எந்த ஒரு நாகரிகத்துக்குப் பின்னாலும் ஒரு நூல் இருந்திருக்கின்றது என்கின்றார் அறிஞர் ஹம்ஸா யூசுப் அவர்கள். 

எனவே குர்ஆன் என்பது மனித நாகரிகம் ஒன்றை உருவாக்குவதற்காக அனுப்பப்பட்ட நூல் என்று சொல்வது பொருத்தமானதே. 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Comments