வீணான எண்ணங்கள்!

பின் வரும் திருமறை வசனம் நம் ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது.

“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். (4:119)

ஷைத்தானின் வேலைகளில் ஒன்று: "அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்."

வீணான எண்ணங்களை ஷைத்தான் "உண்டாக்குவது" என்றால் என்ன?


"உமன்னியன்னஹும்" என்ற சொற்றொடரில் இடம் பெற்றுள்ள வேர்ச்சொல்லுக்கு "ஒன்றினை எறிதல்" என்ற பொருளும் உண்டு.

அதாவது - ஒரு விதையைத் தூக்கி வயலில் எறிவதைப் போல - வீணான எண்ணம் ஒன்றினை ஷைத்தான் நம் உள்ளத்தில் எறிந்து பார்க்கின்றான். அதற்கு நாம் இடம் கொடுத்து விட்டால் விளைவு என்ன?

1 .நாம் ஷைத்தானை நமது நண்பனாக ஆக்கிக் கொண்டு விடுகிறோம்!

2. பகிரங்கமான பெரு நஷ்டத்துக்கு நம்மை நாமே ஆளாக்கிக் கொள்கின்றோம்!

எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.

வீணான எண்ணங்கள் "எறியப்படுவதை" நாம் தவிர்க்க இயலாது. ஆனால் அதற்கு செயல் வடிவம் கொடுத்திடாமல் நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும். இதற்குத் தேவை மன உறுதி!

Comments