சொற்பொழிவுகள் - கொஞ்சம் மாற்றி சிந்திப்போமா?


பெரும்பாலும் சொற்பொழிவு என்பது ஒரு வழிப்பாதை! ஒருவரே தொடர்ந்து பேசுவார். நாம் அனைவரும் செவி தாழ்த்தி வாய் பொத்திக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

கேட்பவர்களில் சிலருக்கு சந்தேகங்கள் வரும். உரை முடிந்து கேள்வி நேரம் என்று அறிவிப்பார்கள். வசதியான ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கப்படும். நேரமும் போதாது.

"உங்கள் பேச்சு அருமை!" என்று சிலர் சொல்லி விட்டுச் சென்று விடுவார்கள்! அவ்வளவு தான்!

இப்படிப்பட்ட சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் - One Way Communication - என்று வரையறுக்கிறார்கள்.

இம்முறையிலுள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவெனில் - சொற்பொழிவைக் கேட்பவர்களின் கவனம் என்பது (attention span) மிகக்குறைவு. அதாவது பதினைந்து சதவிகிதம் மட்டுமே.

அதாவது ஒருவர் ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றுகிறார் என்றால் ஒரு ஒன்பது அல்லது பத்து நிமிடம் மட்டுமே ஒருவரால் கவனத்தைக் குவித்துக் கேட்டிட முடியும்.

கல்வித் துறையில் இது குறித்து பெரும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தான் கல்வித்துறையில் கற்பித்தல் வழிமுறைகளில் (teaching methodologies) பல மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு, உலகெங்கும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த "நவீன" வழிமுறைகளுள் ஒன்று தான் இரு வழிக் கருத்துப் பரிமாற்றம். அதாவது Two Way Communication.

இன்றைய இளைஞர்களிடத்தில், இஸ்லாமியக் கருத்துகளை மிகச் சிறப்பாகக் (effective) கொண்டு போய் சேர்ப்பதற்கு இந்த இருவழிக் கருத்துப் பரிமாற்றம் மிக அவசியம்.

நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு அளித்த இஸ்லாமியப் பயிற்சிகளில் இந்த இரு வழிமுறைகளையும் கையாண்டிருக்கிறார்கள்.

இது குறித்து அதிகமாக நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எஸ் ஏ மன்சூர் அலி

Comments