இறை நியதி அல்லது இறைவனின் வழிமுறை



இறை நியதி அல்லது இறைவனின் வழிமுறை

(சுனன் இலாஹிய்யா)
---------------------------------------

அனைத்தையும் படைத்துக் காக்கும் எல்லாம் வல்ல இறைவன், தன் படைப்பினங்கள் விஷயத்தில் என்றுமே மாறாத சில பொது விதிகளை விதித்து வைத்திருக்கின்றான்!

மாற்றத்துக்குள்ளாகாத இந்த விதிமுறைகளை - இறை நியதி என்றோ, இறைவனின் வழிமுறை என்றோ, அல்லது பொதுவாக உலகப் பொது விதி (Universal Laws) என்றோ குறிப்பிடலாம். அரபியில் இதனை சுனன் இலாஹிய்யா என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

மாற்றத்துக்குள்ளாகாது அந்த இறை நியதிகளுள் எந்த ஒன்றும்! 

"திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்."  (17:77)

"....அல்லாஹ்வின் அவ்வழியில் யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்." (35:43)

எவ்வித மாற்றத்துக்கும் ஆளாகாத அந்த உலகப் பொது விதிகளை, நாம் திருமறையிலிருந்து அறிந்து புரிந்து கொள்வதன் மூலம், அளப்பறிய நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ள இயலும். நம்மைச் சுற்றியுள்ள "உலகத்தை" எவ்வாறு நாம் பார்த்திட வேண்டும் என்பதை அந்த அறிவு கற்றுக் கொடுக்கும். நமது சிந்தனைச் சிக்கலுக்கும் (intellectual crisis), உளவியல் சிக்கல்களுக்கும் (psychological confusions) அதில் "மருந்து" கிடைத்திடும்!

தனி மனிதர்கள் மட்டுமல்ல, ஒரு சமூகம் செல்ல வேண்டிய சரியாத திசையை அது தெள்ளத் தெளிவாக நமக்குக் காட்டி நிற்கும்! தீர்க்கவே முடியாது என்று நாம் கைவிட்டு விட்ட பிரச்னைகளைக் கூட, தீர்த்து வைத்திடும் வழியை அது காட்டும்! நம்மை அழுத்திக் கொண்டிருந்த குழப்பங்கள் நீங்கி விடும்.

அதோடு மட்டுமல்லாமல்,  மாறாத அந்த இறை நியதிகளை நாம் புரிந்து கொண்டு விடும்போது, வல்லோன் இறைவனின் அளப்பரிய அறிவாற்றலையும், அவனது அரும்பெரும் கருணையையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.  இறைவனின் மீதான நமது அன்பும், பாசமும் புத்துயிர் பெற்றெழும்! இதில் சந்தேகமே வேண்டாம்!

இவ்வாறு இறைவனால் விதித்துத் தரப்பட்ட இறை நியதிகள் பல அல் குர்ஆனிலே இடம் பெற்றுள்ளன.
அப்படிப்பட்ட இறைவனின் நியதிகள் சிலவற்றை இங்கே குறிப்பிடுவோம். 

1 Unity of Origin / Unity of Creation - படைப்பினங்கள் அனைத்துக்கும் மூலம் - ஒரே இறைவனே!

2 Pairity of Creation - படைப்பினம் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே படைக்கப்பட்டுள்ளன!

3 Diversity of Creation - படைப்பினங்கள் ஒவ்வொன்றையும், பல வகைகளாகப் பிரித்து வைத்திருப்பவன் இறைவன்!

4 Balancing the Creation - எல்லாப் படைப்பினங்களுக்கு மத்தியிலும், ஒரு நடு நிலையை விதித்து வைத்திருப்பவன் இறைவன்!

இன்னும் பல இருக்கின்றன!

அடுத்த பதிவு ஒன்றில்  - இறைவனின் நியதிகளுள் ஒன்றை சற்று விரிவாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்!

Comments