My FaceBook Entries



நமது நவீன காலப்
பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு
நவீன கால ஆய்வுகள்
மிக அவசியம்!

முற்கால ஆய்வுகளை வைத்துக்கொண்டு
இக்காலப் பிரச்னைகளைத்
தீர்க்கவே முடியாது!

@@

ஷரீஅத் என்பது

இஸ்லாமிய சட்டம் அன்று!

(மாறாக) - ஷரீஅத் என்பது

இஸ்லாமியப் பண்பாடு ஆகும்!

- டாக்டர் ஜாசிர் அவ்தா

Shariah is not Islamic Law!
(Rather), Shariah is Islamic Ethics!!

- Dr. Jasser Auda

@@

நமது உயர்ந்த இலக்குகள் என்றுமே மாறாதவை!

இறை திருப்தியே நமது ஆன்மிக இலக்கு!

நற்குணங்கள் - நம் ஒவ்வொருவரின் தனிமனித இலக்கு!

அன்பும், இரக்கமும், அமைதியும் - நம் குடும்பங்களின்

உயர் இலக்கு!

அன்பு, இரக்கம், நீதி, அமைதி, பரஸ்பர புரிந்துணர்வு,

பரஸ்பர உதவி, ஒத்தாசை,

கண்ணியம், பாதுகாப்பு, தனிமனித சுதந்திரம்,

பன்மைத்துவம் - இவையே

அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நமது உலகியல்

இலக்குகள்!

நமது உயர்ந்த இலக்குகள் என்றுமே மாறாதவை!

# Higher Objectives of Islam

@@

பயணத்தின் நடுவே

சண்டை சச்சரவுகளில் இறங்கி விட்டால்

சென்றடைய வேண்டிய "ஊர்" எது

என்பதையே மறந்து விடுவோம்!

#What is our destination?

@@

முதியவர்கள் பழைய சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள்!

பழைய சிந்தனைகள் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்கள்!

முதியவர்கள் தங்களின் பழைய சிந்தனைகளுக்கு

ஒரு கட்டம் கட்டி - அதற்குள்

இளைஞர்களை அடைத்து விடுகிறார்கள்!

இளைஞர்கள் - அந்தக் கட்டத்துக்கு வெளியே வந்து

சிந்திக்காத வரை சமூகம் முன்னேற வாய்ப்பே இல்லை!

Think out of the box!

@@

ஊர் ஒன்று தான்!

ஆனால் வழிகள் பல!

ஒரு வழி அடைக்கப்பட்டு விட்டால்

இன்னொரு வழியைத் தேடு!

பயணத்தை "ரத்து" செய்து விடாதே!

@@

எந்த அளவுக்கு
உனது ஆளுமையில்
"தூய்மை" இருக்கிறதோ
அந்த அளவுக்கே
உன்னால்
பொது வாழ்வின் சவால்களை
சிறப்பாக
எதிர் கொண்டிட முடியும்!

தூய்மையற்ற ஆளுமைகள்
வரலாற்றுக் குப்பைகள்!

@@

நற்பண்பு ஒன்றை
நமக்குள்ளேயே
"வளர்த்துக்" கொள்ளாமல்
பிறருக்குள் எப்படி
அதனை "விதைத்திட" இயலும்?

@@

மார்க்க "சட்டங்களைப்" பின்பற்றும் நம்மில் பலர் "மார்க்கத்தைப்" பின்பற்றுவதில்லை!

@@

Quran is for character development!

@@

உண்மையை உண்மை என்றும்

பொய்யை பொய் என்றும்

புரிந்து கொள்ளாத நிலையில் தான்

நம்மில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை

ஓடிக் கொண்டிருக்கின்றது!

விளைவு:

கற்பனை பயம்!

@@

சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க!

@@

நன்றி உணர்வோடு
வாழ்வது தான்
இறை உணர்வின்
அடையாளம் ஆகும்!

தக்வாவையும் - ஷுக்ரையும்
திருக்குர்ஆன் இணைக்கிறது!

பார்க்க (3:123)

@@

சங்கடங்களைப்
பொறுத்துக் கொள்ளுங்கள்!

ஏனெனில் -
அவற்றில் கூட
உங்களுக்கு
செய்திகள் இருக்கலாம்!

@@

குழந்தைகளின்
உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும்
புரிந்து கொள்ளும்
காலத்தில்
நாம் வாழவில்லை!

பாவம் குழந்தைகள்!

@@

சாதனை இல்லாத நாள்

என்று ஒன்று இல்லை!

ஒரு புன்முறுவல் கூட

ஒரு சாதனையே!

ம்! போ!

***

There is no such day as an unproductive day!

Just smiling at a face too is productive!

Go ahead!

@@

பனீ இஸ்ராயீல் சமூகத்தை
எந்தெந்த அளவுகோல்களுடன்
இறைவன் தன் திருமறையில் வைத்து விமர்சனம் செய்திருக்கின்றானோ -

அதே அளவுகோல்களுடன்
இன்றைய முஸ்லிம் சமூகத்தை
விமர்சனத்துக்கு
உட்படுத்தப்பட வேண்டியது
காலத்தின் கட்டாயம்!

@@

துஆ
ஒரு அற்புதமான
உளவியல் மருத்துவம்!

@@

Lack of sabr leads to severe depression!

There is no positive thinking without the dhikr of Allah 'azza wa jall!

@@

இறை நம்பிக்கையாளர்கள்

ஒவ்வொருவரும்

இறை நேசச் செல்வர்களே!

- இமாம் அத்தஹாவி

@@
இதயத்தை
ஷைத்தானிடம்
ஒப்படைத்து விட்டால்
எந்த உறுப்பை உன்னால்
பாதுகாக்க முடியும்?

@@

"Majority of the
Quranic verses
can be understood
by everybody."

- Imam Razi in his Tafseer Kabeer

@@

முக்கியம் வாய்ந்த விஷயங்களுக்கு
முன்னுரிமை தந்து
மற்றவற்றைப்
பின் தள்ளி வைப்பது
இறை நேரத்தின்
அடையாளம்!

- இஸ்லாமிய அறிஞர் ஒருவர்

@@

ஆபத்தான சூழ்நிலையில் கூட
ஒன்று பட மறுப்பவர்கள்
மிருகங்களை விடக் கீழானவர்கள்!

- இஸ்லாமிய அறிஞர் ஒருவர்

@@

உன்னைப் பற்றி
ஒருவருக்கும்
ஒன்றும் தெரியாதெனில்
உன் வாழ்க்கை
இலகுவானதே!

- யாரோ

@@

உரிய ஒருவருக்கு
உரிய நேரத்தில்
உரிய தகவலைக்
கொண்டு சேர்ப்பதில்
உரிய அக்கரை
நம்மிடம் இல்லை!

# Communication Gap

@@

பகுத்தறிவாளர்களை
அணுகிட
அறிவியல் மட்டும் போதாது!

உளவியலும்
மிக அவசியம்!

@@

சமூக சீர்திருத்தம்
இல்லாமல்
அழைப்புப் பணி
செய்வது என்பது

அசுத்தமான வீட்டுக்கு
விருந்தினரை
அழைப்பது போலாகும்!

- ஓர் இஸ்லாமிய அறிஞர்

@@

"நின்னு சாதிக்கணும்!
ஓடி ஒளியக் கூடாது!"

- என் தாய்
எனக்குக் கூறிய அறிவுரை

@@

எதற்காக எழுதுகிறோம்?
------------------------------------------

உண்மையை மற்றவர்கள் உணர வேண்டும் என்பது தானே நமது நோக்கம்?

நமது கருத்துகளை நாம் முன் வைத்து எழுதுவதினூடே, நமது நல்ல எண்ணமும், நல்ல நோக்கமும் தான் வெளிப்பட வேண்டுமே தவிர, நமது கோபங்கள் வெளிப்படுவதை முற்றாக நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் பயன்படுத்தும் சில சொற்கள், நமது கருத்துகள் உள்வாங்கப்படுவதற்கு பதிலாக, அதற்குத் தடையாகவே (resistance) அமைந்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்!

ஒரு சில சொற்களுக்கு உளவியல் தாக்கம் உண்டு.

அறியாமை என்று சொல்லலாம்.

ஆனால் முட்டாள்தனம் என்று குறிப்பிடுவதைத் தவிர்த்தல் நலம்.

(Reaction:"டேய், நம்மள - fool னு சொல்றான்டா இவன்!")

சாடல் இல்லாமல் எழுதுவது சாலச் சிறந்தது!

தேவை ஹிக்மத்தும் மவ்-இலத்தில் ஹஸனாவும் தான்!

@@

Respect your feelings!

But

Regulate your emotions!

@@

கேளிக்கைகளில் ஈடுபாடு
அதிகரிக்கிறதா?

அது
மன நலக் கோளாறு
ஒன்றின் அறிகுறி!

@@

உறவுகளைக்
கெடுப்பதெல்லாம்

ஊகங்கள் தாம்!

@@

படைப்புகள் ஒவ்வொன்றிலும்
பல அற்புதங்களைப்
பொதித்து வைத்திருப்பவன்
இறைவன்!

அந்த அற்புதங்கள் ஒவ்வொன்றிலும்
பல செய்திகளை நமக்கெனப்
பொதித்து வைத்திருப்பவன்
இறைவன்!

#ஆயத்

@@

மரணத்துக்குப் பின்
மண்ணாகித் தான் போகிறோம்-
வேறொன்றுமில்லை எனில் -
மனித வாழ்க்கைக்கு
என்ன பொருள் தோழர்?

#லாஜிக் உதைக்கிறதே!

@@

கந்து வட்டியின் பிடியில்
டெல்டா விவசாயிகள்!
- செய்தி

வட்டியில்லாக்
கடன் குறித்து
முஸ்லிம்கள்
சிந்திக்க வேண்டிய நேரம்!

#கஜா

@@

நாம் சற்றும்
எதிர்பார்த்திராத
புறத்திலிருந்து

நமக்கு செல்வம்
வந்து சேர்வதிலும்

இறைவன்
நமக்குச் சுட்டிக் காட்டும்
செய்திகள் உண்டு!

#ஆயத்

@@

சொல்லி வைப்போம்!
*********************************

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை வெள்ளத்தின் போது, நிவாரணப்பணிகளில் முஸ்லிம் சமூகம் ஆற்றிய பங்கினை நாம் அறிவோம். அந்தப் பணிகளில் ஈடுபட்ட நம் சகோதரர்களுக்கு நல்ல பல அனுபவங்கள் கிடைத்திருக்கும்.

அது போலவே, இன்றைய கஜா புயலின் போதும் நம் சகோதரர்கள் இரவு பகல் பாராது, அயராது பாடுபட்டு, நிவாரணப் பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதையும் நாம் பார்த்து வருகிறோம். இதிலும், நமக்கு பல அனுபவங்கள் கிடைக்கும்.

இது விஷயமாக என் மனத்தில் உள்ள கருத்து ஒன்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தப் புயல் நிவாரணப் பணிகளில், இஸ்லாமிய அமைப்புகள் பலவும் களத்தில் இறங்கிப் பணியாற்றுகின்றன. தங்களால் இயன்றவரையில் பணம் பொருள்களைச் சேர்த்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பல இடங்களுக்குச் சென்று பணியாற்றுவது போற்றுதற்குரிய செயல் தான்.

ஆனால், இந்த இயக்கங்கள் சார்ந்த அணுகுமுறையை, சற்று மாற்றி செய்தால் என்ன என்பதை சமூகத்தின் சிந்தனைக்கு வைக்கிறேன்.

தமிழகத்தில் ஒரு 5000 ஜமாஅத்துகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். புயலிலோ வெள்ளத்திலோ, ஒரு 500 பகுதிகள் பாதிப்படைந்துள்ளன என்றும் வைத்துக் கொள்வோம். நம் சமூகத்தின் ஜமாஅத்களில் ஒரு பத்து சதவிகிதம் ஜமாஅத்துகள் முன் வந்து, அவற்றில் ஒவ்வொரு ஜமாஅத்தும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு பகுதியையோ நிவாரணப் பணிகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டால், அந்த அணுகுமுறை எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு ஜமாஅத்தின் முதல் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று களத்தை ஆய்வு செய்து விட்டு, ஏதேனும் ஒரு பகுதியைத் தங்களுக்கென்று தேர்வு செய்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு குழு அங்கு சென்று அந்தப் பகுதிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை முழுமையாகக் கணக்கெடுத்துக் கொண்டு திட்டம் ஒன்றை வகுத்திட வேண்டும். இன்னொரு குழு, ஜமாஅத் கூட்டம் ஒன்றை நடத்தி, பணம் பொருள்களைச் சேகரித்துத் தருவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு தடவையேனும், பள்ளி இமாம் அவர்களும் முத்தவல்லி நாட்டாண்மைப் பொறுப்பில் உள்ளவர்களில் ஒரு சிலரும், பாதிக்கப்ப்ட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விட்டு தங்களின் முழுமையான ஒத்துழைப்பு அவர்களுக்கு உண்டு என்று உறுதியளித்து விட்டு வர வேண்டும்.

அரசின் ஒத்துழைப்புடன் செய்யக் கூடிய நிவாரணப் பணிகளிலும் ஊர் மக்கள் மாறி மாறிப் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஜமாஅத்தின் மாணவர்களை அங்கு அழைத்துச் சென்று, சமூக சேவையின் அவசியத்தை அவர்களுக்கு வலியுத்தலாம்.

இதனால் ஏற்படும் விளைவுகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

1 இரண்டு ஊர்களுக்கு மத்தியில் நிரந்தர நட்பு ஒன்று மலரும்.

2 இதர காலங்களில் இந்த நட்பு தொடரும் வண்ணம், நமதூர் நிகழ்ச்சிகளுக்கு அவ்வூர் பிரமுகர்களை வரவழைக்கலாம்.

3 அந்த ஊர் மக்களும் நம்மை அழைத்து கவுரவிப்பார்கள். அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளலாம்.

4 அந்த ஊர் வழியே நாம் எப்போதாவது செல்லும்போது, அவர்களை சந்தித்து அளவளாவி விட்டுச் செல்லலாம்.

இதற்கு மேல் நீங்களே சிந்தியுங்கள்.....

நன்மையை நாடி...

@@

தவ்ஹீத்
எனும் ஏகத்துவம்
மிக எளிமையானது!

அதனை நாம் தான்
சிக்கலான ஒன்றாக
ஆக்கி வைத்திருக்கிறோம்!

@@

உன் சொந்த
வேதத்தின் உள்ளடக்கத்தை
நீ புரிந்து கொள்ளாவிட்டால்

உன் சொந்த
வாழ்க்கையையே
நீ புரிந்து கொள்ள முடியாது!

@@

Our context too is an "ayah"!

@@

Comments