கவலை - ஓர் ஆய்வு - பகுதி 2 - ஹஸரத்


ஹஸரத் - எனும் அரபிச் சொல் - கவலையைக் குறிக்கும் இன்னொரு  சொல்லாகும். 

இதன் பொருள் வருமாறு: 

Dictionary meaning of the root of the above term:  
Hasara – to pull away or off; remove something from (a cover, a veil, ) to uncover; lay bare; unveil; to become dim (sight); to regret; be greived; be pained; to sigh; to become tired; fatigued; weaken, sap; sadden; 

Hasaratan – sorrow; pain; distress; affliction; unfortunately; what a pity; too bad; 

தமிழில் - ஏக்கம், கைசேதம், சோர்வு - என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.  

**
இச்சொல் திருமறையில் அதன் வெவ்வேறு மொழி வடிவங்களில் 12 தடவைகள் இடம்பெற்றுள்ளன. 
அவை: 

8:36          3:156 21:19 19:39 36:30 69:50

2:167 35:8       39:56        6:31         67:4          17:29

இவற்றுள் ஒரு சில இறை வசனங்களைக் கொண்டு ஆய்வு செய்வோம்: 

19: 39

وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ

மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

And warn them of the Day of Regret, when the matter will be concluded. Yet they are heedless, and they do not believe.

இங்கே "regret" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்!

36:30

يَا حَسْرَةً عَلَى الْعِبَادِ ۚ مَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ

அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.

Alas for the servants. No messenger ever came to them, but they ridiculed him.

3: 156

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ كَفَرُوا وَقَالُوا لِإِخْوَانِهِمْ إِذَا ضَرَبُوا فِي الْأَرْضِ أَوْ كَانُوا غُزًّى لَوْ كَانُوا عِنْدَنَا مَا مَاتُوا وَمَا قُتِلُوا لِيَجْعَلَ اللَّهُ ذَٰلِكَ حَسْرَةً فِي قُلُوبِهِمْ ۗ وَاللَّهُ يُحْيِي وَيُمِيتُ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

 முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.

O you who believe! Do not be like those who disbelieved, and said of their brethren who marched in the land, or went on the offensive, "Had they stayed with us, they would not have died or been killed." So that Allah may make it a cause of regret in their hearts. Allah gives life and causes death. Allah is Seeing of what you do.

***

ஏற்பட்டு விட்ட நஷ்டம் ஒன்றுக்காகக் கைசேதப்படுவதையே ஹஸரத் என்ற சொல்லாடல் குறிக்கிறது எனலாம். 

நாம் முன்னரே - ஹுஸ்ன் எனும் சொல் குறித்து சற்றே ஆய்வு செய்துள்ளோம். அதாவது "கவலை" என்பது,  அதுவும் குறிப்பாக - கடந்த காலத்தில் நடந்து விட்ட ஒன்றை வைத்து, எதிர்காலத்தில் ஏற்படவிருக்கின்ற நஷ்டம் குறித்து கவலைப்படுவதைத் தான் ஹுஸ்ன் எனும் சொல் குறிக்கிறது என்று பார்த்தோம்.   

அப்படியானால் - ஹுஸ்ன் எநும் சொல்லுக்கும் ஹஸரத் எனும் சொல்லுக்கும் என்ன வேறுபாடு என்று நாம் கேட்கலாம்!

இங்கே தான் நாம் கூர்ந்து கவனித்திட வேண்டும்!

கைசேதப் படுவது என்பது - ஒன்றை நாம் தேர்வு செய்யாமல் போய் விட்டதனாலேயோ, அல்லது ஒன்றை நாம் செய்யாமல் விட்டு விட்டதனாலேயோ - ஏற்பட்டு விடுகின்ற நஷ்டத்தை எண்ணி "அடடா! இப்படி ஆகி விட்டதே! இப்படி ஆகும் எனத் தெரிந்திருந்தால் நாம் அப்படி செயல் பட்டிருப்பேனே!" - என்று ஏங்கித் தவிக்கின்ற கவலை ஆகும் எனச் சொல்லலாம்!

ஆனால் - ஹுஸ்ன் என்பது அப்படிப்பட்டது அல்ல! அது - நாம் ஒரு விஷயத்தைக் குறித்து "முயற்சிகளை" மேற்கொள்ளத்தான் செய்கிறோம். ஆனாலும் அந்த ஒன்று நமக்குக் கைகூடாமல் போய் விடுகிறது  என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஏற்படுகின்ற கவலை தான் ஹுஸ்ன் எனப்படுவது. அந்தத் தருணங்களில் - "அந்த ஒன்று" நமக்குக் கிடைக்காமல்  போய் விட்டதற்காகக் கவலைப்பட வேண்டாம் என்கிறான் இறைவன் என்பதைத் தான் நாம் முன்னரே பார்த்தோம்!

பின் வரும் வசனங்களைக் கூர்ந்து கவனித்துப் படியுங்கள். தெள்ளெனப் புரியும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!

**

69: 48- 50

وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ
وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنْكُمْ مُكَذِّبِينَ
وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ

ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும். ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். அன்றியும், நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்கு  கைசேதமாக இருக்கிறது.

Surely, it is a message for the righteous. And We know that some of you will reject it.  And it is surely a source of grief for the unbelievers.

2: 167

قَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا مِنَّا ۗ كَذَٰلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ ۖ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ

(அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.” இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.

Those who followed will say, "If only we can have another chance, we will disown them, as they disowned us." Thus Allah will show them their deeds, as regrets to them, and they will not come out of the Fire.

39:56
أَنْ تَقُولَ نَفْسٌ يَا حَسْرَتَا عَلَىٰ مَا فَرَّطْتُ فِي جَنْبِ اللَّهِ وَإِنْ كُنْتُ لَمِنَ السَّاخِرِينَ

“அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;

 So that a soul may not say, "How sorry I am, for having neglected my duty to Allah, and for having been of the scoffers."

17: 29

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا‏ 

உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்

@@@

Comments