கவலை ஓர் ஆய்வு - பகுதி 8 - அஸவ்


அஸவ் - தஃஸவ் / Asau - Ta'sau

அஸவ் என்பதும் கவலையைக் குறித்திடும்  இன்னொரு அரபிச் சொல் தான்!

இச்சொல்லின் அகராதிப் பொருள்:

Asau - To nurse. Treat (a wound), to make peace, to be sad, grieved, distressed, to share, charitable, to console,

இச்சொல் இடம் பெற்றிருக்கும் இறை வசனங்கள் நான்கு:

5:26       5:68       57:23       7:93

**

5:26

قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛ أَرْبَعِينَ سَنَةً ۛ يَتِيهُونَ فِي الْأَرْضِ ۚ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِينَ

(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை (ta'sa) கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.

5 : 68

  قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لَسْتُمْ عَلَىٰ شَيْءٍ حَتَّىٰ تُقِيمُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ ۗ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا ۖ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

“வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம் (fa laa ta'sa).

57:23

لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ‏

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் (ta'sau) இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

7: 93

فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَا قَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَاتِ رَبِّي وَنَصَحْتُ لَكُمْ ۖ فَكَيْفَ آسَىٰ عَلَىٰ قَوْمٍ كَافِرِينَ

இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன் (kaifa aasaa)” என்று அவர் கூறினார்.

**
படிப்பினைகள்:

பொதுவாக நாம் நமது பொருள்களில் இழப்பை சந்தித்தால், நமக்குக் கவலை வந்து விடுவது இயல்பே! ஆனால் அது குறித்து கவலை வேண்டாம் என்கிறான் இறைவன்! ஏனெனில் - அது விதியின்பாற்பட்டது என்று நினைவூட்டுகிறான் இறைவன். பார்க்க 57:22

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். (57:22)

இறைவன் நம்மிடம் உள்ள "பொருள்களுள் சிலவற்றை" நம்மிடம் இருந்து எடுத்து விடுவதில் - "நமக்கு ஏதோ நன்மை இருக்கிறது!" - என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அந்தப் பொருள் நம்மிடம் இருப்பதால், நமக்கு அதில் "எந்தப் பயனும் இல்லை!" என்பது தான் இறைவனின் விதி! எனவே அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதையே அஸவ் என்ற கவலை - சுட்டிக்காட்டுகிறது.

எதனால், இவ்வாறு சொல்கிறோம் என்பதற்கான விளக்கம் பின் வரும் இறை இறை வசனங்களில்  இருக்கிறது!  பார்க்க: 5:26, 5:68, 7:93

நன்றி கெட்டவர்கள் பனீ இஸ்ரவேலர்கள்! தட்டலைந்து திரியட்டும் ஒரு நாற்பது ஆண்டுகள் என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு! அவர்களுக்காக "அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!" என்கிறது முதல் வசனம்! அப்படி என்றால் என்ன? அத்தகையவர்களால் "உங்களுக்கு எந்த விதப் பயனும் இல்லை! என்பது தான் பொருள்!

(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை (ta'sa) கொள்ள வேண்டாம்” என்று கூறினான். (5:26)

அடுத்து நபியவர்கள் காலத்து யூதர்கள்! அவர்களின் நிலையும் அதே நிலை தான்! "நபியவர்களே! இவர்கள் குறித்து நீங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!" என்பது தான் இங்கேயும் அறிவுரை!

“வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம் (fa laa ta'sa). (5:68)

அடுத்து - வசனம் 7:93 ல் நபி ஷுஐப் (அலை) அவர்கள் ஒரு படி மேலே போய் "நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்? (kaifa aasaa)” என்று கூறுகிறார்கள்!

இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன் (kaifa aasaa)” என்று அவர் கூறினார். (7:93)

சுருக்கமாகச் சொல்வது என்றால் - நம்மை விட்டுப் போய் விட்ட -ஒன்றுக்கும் பயனில்லாத செல்வம் குறித்தும் கவலைப்பட வேண்டாம்! நம்மை விட்டுப் போய் விட்ட, ஒன்றுக்கும் உதவாத நிராகரிக்கும் மக்களுக்காகவும் கவலைப்படத் தேவையில்லை! அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாக, நமக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரியே!

இதையே, இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், பயனற்ற செல்வத்தை விட்டும், பயனில்லாத மக்களை விட்டும் நம்மைப் பாதுகாத்ததற்காக, நாம் தான் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றோம் என்றால் அது மிகையில்லை!

செல்வத்தைக் குறித்து இவ்வளவு வலியுறுத்தி இறைவன் சொல்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

நமது பொருள் "பயனுள்ளதாக" எப்போது மாறும்? இறைவனின் வழியில் செலவு செய்யப்படும்போது மட்டும் தானே! உற்று நோக்கினால் 57 - வது அத்தியாயமான சூரத்துல் ஹதீதின் மையக் கருத்தே - இறைவழியில் செலவு செய்வது குறித்துத் தான்!

அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (57:10)

இதில் இன்னொரு பாடமும் இருக்கிறது! இதற்கு நாம் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய வசனங்கள் இரண்டு!

அவை 57:23, 3:153 - ஆகிய இரண்டும் தான்!

கவலையைக் குறித்திட 57:23 ல் - பயன்படுத்தப்பட்ட சொல் அஸவ்! (li kay laa ta’sau)
கவலையைக் குறித்திட 3: 153 ல் - பயன்படுத்தப்பட்ட சொல் ஹுஸ்ன்! (li kay laa tahzanoo)

ஏன் இந்த வேறுபாடு?

செல்வம் நம்மை விட்டுப் போவதனாலோ, அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் ஆதரவு நம்மை விட்டுப் போய் விடுவதனாலோ ஏற்படும் கவலையைக் குறிக்க அஸவ் என்ற சொல்லைத் தேர்வு செய்திடக் காரணம் - அது "மென்மையான கவலை" என்பதனால் தான்!

ஆனால் வசனம் 3:153 அப்படிப்பட்ட "சாதாரண" சூழல் குறித்துப் பேசிடவில்லை!  மாறாக, அந்தச் சூழல் மிகக் கடுமையானது. பொருள் கிடைக்காமல் போவது ஒரு பக்கம் இருக்கட்டும்! தங்களின் ஒட்டு மொத்த இருப்புக்கே ஆபத்து வந்து விட்ட சூழலைக் குறித்திட  ஹூஸ்ன் எனும் ஆழ்ந்த கவலையைக் குறிக்கும் சொல்லைத் தேர்வு செய்கிறான் இறைவன்!

இறைவன் மிக அறிந்தவன்!

@@@

Comments