ஆன்மிக ஆளுமை - பகுதி 1



தற்செயலா?

‘விண்வெளியில் ஒரு கற்பனைப் பயணம்! தயாரா? ஒரு கற்பனை வாகனத்தில்! இதோ புறப்படு! திரும்பாமல் வளையாமல் ஒரே நேர்கோட்டில் செல்! வேகமாக! அதி வேகமாக! வேகம் என்ன தெரியுமா? வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்; வேகத்தில்! வேகத்தைக் குறைக்காதே! அதே வேகத்தில் செல்! ஓரே சீராக!


எவ்வளவு நேரம் இந்தப் பயணம்? ஒரு ஆயிரம் ஆண்டுகள்? இல்லை! பத்தாயிரம் ஆண்டுகள்? இல்லை இல்லை!! ஒரு பத்து லட்சம் ஆண்டுகள்! பயணித்து விட்டாயா? நீ எங்கே போய் சேர்ந்திருப்பாய்?


விண் வெளியின் எல்லைக்கா? எல்லையைத் தொட்டு விட்டாயா என்ன?

இல்லை! அங்கே சற்றே நின்று வானத்தைப் பார்! இன்னும் அதிகமான விண்வெளி! இன்னும் புதிய விண்மீன்கள்! மீண்டு;ம் பயணத்தைத் தொடர்வோமா? சரி, புறப்படு! மீண்டு;ம் இன்னொரு பத்து லட்சம் ஆண்டுகள்!


இன்னொரு புதிய இடம்! இப்பொது எங்கிருக்கிறோம் நாம்? எல்லை தென்படுகிறதா? எப்போது தான் அடைவோம் எல்லையை?


சரி! நாம் கடந்து வந்த பாதையை சற்றே கணக்கிட்டுப் பார்! தூரத்தைக் கணக்கிட்டுப் பார்! இவ்வளவு தூரம் நாம் கடந்து வந்து விட்டாலும் இன்னும் நாம் நமது பேரண்டத்தின் நடுவில் தான் எங்கேயோ இருந்து கொண்டிருக்கிறோம்!’


இவ்வளவு தூரம், இவ்வளவு விண்வெளி, இவ்வளவு பிரம்மாண்டமான அமைப்பு எப்படி ஏற்பட்டது என்ற ஒரு கேள்வி எழுவது இயல்பு.


ஒரு புறம் இறைவனை நம்புபவர்கள், இறைவன் தான் இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்றான் என்று நம்புகிறார்கள்.


‘இந்த வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. தக்க காரணத்திற்காகவே அன்றி இவைகளை றாம் படைத்திடவில்லை! எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை!’ (திருக் குர்ஆன் 44: 38-39)


ஆனால் இறைவனை நம்பாதவர்கள் – நமது பிரபஞ்சத்தின் அமைப்பு மற்றும் கட்டுக்கோப்பு, அதன் அனைத்து இயக்கங்கள் ஆகியவற்றை ஆய்ந்த பின்பும் – இது தற்செயலாக நடந்து விட்ட ஒரு விண்வெளி விபத்து (ஊழளஅiஉ யுஉஉனைநவெ) என்று துணிந்து கூறுகிறார்கள். எனவே இந்த தற்செயல் கோட்பாட்டை நாம் சற்றே ஆழமாக விவாதிப்போம்.


பத்து ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ‘பூவா தலையா’ போட்டுப் பாருங்கள். ஒரு தடவை ஏழு தலை – மூன்று பூ என்று விழலாம். மறு தடவை எட்டு பூ இரண்டு தலை என்று விழலாம். இவற்றை தற்செயல் என்று சொல்லலாம். ஆனால் ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பூவா தலையா போட்டுப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். ஆயிரமும் தலையாகவே விழுவதாக வைத்துக் கொள்வோம். தற்செயலாக!


ஆனால் மறு தடவை போட்டுப் பார்த்தால் அப்போதும் ஆயிரம் தலைகள். மூன்றாவது தடவையும் ஆயிரம் தலைகள் என்று விழுந்தால் – இதனை ‘தற்செயல்’ என்று ஏற்பீர்களா? எல்லா நாணயங்களையும் சோதித்துப் பாரப்பீர்கள் – இரண்டு பக்கங்களும் தலைகளாக உள்ளனவா என்று!


இதிலிருந்து என்ன தெரிகிறது? தற்செயலான ஒரு காரியம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பது தானே! இப்போது நமது பேரண்டத்தின் முழு வடிவத்தையும் நம் மனக்கண் முன்னே கொண்டு வருவோம். நமது பிரபஞசம் முழுவதிலும் ஒன்றல்ல, இரண்டல்ல – கோடிக்கணக்கான அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன.


கணக்கிடப் பட்;டது போன்றதொரு தூரத்தில் கதிரவன். தற்செயலா?

அதனால் நமக்குப் போதுமான ஒளியும் வெப்பமும். தற்செயலா?

தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது பூமி. அதனால் நமக்கு இரவும் பகலும். தற்செயல்தானா?


சூரிய மண்டலத்தின் ஒன்பது கோள்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் ஆண்டாண்டு காலமாகச் சுழன்றோடிக் கொண்டிருப்பதும் தற்செயலாகத் தானா?


காற்றில் போதுமான அளவுக்கு மட்டும் ஆக்ஸிஜன். தற்செயல்தானா?

நாம் வெளியிடுகின்ற கரியமில வாயுவைத் தாவரங்கள் எடுத்துக் கொள்கிறதாம். தற்செயலா?


அதெல்லாம் இருக்கட்டும் – நம்மையே நமது உடலையே கவனிப்போம்.

நமது மகத்தான மூளை தற்செயலாக உருவானது தானா?


நமது கண்கள், நமது இதயம், நமது இன்ன பிற உறுப்புகள் அனைத்தும் சீராக அமைந்து சிறப்பாக செயல்படுவதெல்லாம் தற்செயலாகத் தானா?


ஏற்க முடியவில்லையே? என்ன சொல்கிறீர்கள்? ”


விரிவடையும் பேரண்டம்


நாம் வாழ்கின்ற இப்பேரண்டம் எவ்வாறு தோன்றியது, இது எங்கே எப்படிப் போய் முடியும், இது எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது - என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வது விஞ்ஞானிகள் பலருக்கு மிக விருப்பமானதொரு துறையாகும்.


கடந்த 20 - ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை கூட விஞ்ஞானிகள் இப்பேரண்டத்தைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்றால் - இப்பிரபஞ்சத்துக்குத் துவக்கம் என்று ஒன்று கிடையாது. இது தொடர்ந்து இப்படியே நிலை பெற்றிருக்கும். இதற்கு முடிவு என்று ஒன்றும் கிடையாது - என்பது தான். இதனையே static universe model - என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது அசையா பிரபஞ்சக் கோட்பாடு என்று இதனைக் கூறலாம்.


ஆனால் 1929 - ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் ஹப்ல் என்பவர் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப் பெரிய உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னார். மிக மிகப் பெரிய தொலை நோக்கி வழியாக, விண்மீன்களில் இருந்து புறப்பட்டு வருகின்ற ஒளிக்கற்றைகளை ஆய்வு செய்தார் அவர். அந்த ஒளிக்கற்றைகள் நிறமாலையில் (spectrum) ஏற்படுத்தும் மாற்றங்களை வைத்து விண்மீன்கள் நம்மை விட்டு விலகித் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாக அவர் கண்டு பிடித்தார். அது மட்டுமல்ல விண்மீன்களும், விண்மீன் மண்டலங்களும் கூட ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கண்டுணர்ந்தார். ஆக, இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்வது எதனை உணர்த்துகிறது எனில் நாம் வாழ்கின்ற இப்பேரண்டம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதைத்தான்!


ஆனாலும் இக்கண்டுபிடிப்பிற்கு முன்னரே, சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் மேதை என்று போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் - தமது இயற்பியல் கணக்;கீடுகளின் அடிப்படையில் - இப்பேரண்டம் அசையாமல் நிலையாக இருந்து கொண்டிருத்தல் சாத்தியம் அல்ல என்று முடிவு செய்து வைத்திருந்தார். எனினும் அவர் தமது கருத்தை உடன் வெளியிட்டு விடவில்லை. காரணம் இப்பிரபஞ்சம் நிலைத்து நிற்கிறது என்ற முந்தைய கோட்பாட்டுடன் முரண்படுகின்ற ஒரு கருத்தை வெளியிட வேண்டாம் என்று தமது கண்டுபிடிப்பை ஓரம் கட்டி வைத்திருந்தார்! பின்னரே அவர் அக்கருத்தை வெளியிட்டார். தாம் கண்டுபிடித்து வைத்திருந்த உண்மையை உடனே வெளியிடாமல் இருந்து விட்டதை - (The greatest mistake of his career) - தமது துறையில் தாம் செய்து விட்ட மிகப்பெரிய தவறு - என்று வருத்தமும் தெரிவித்தார்.


எனவே நமது பிரபஞ்சம் விரிந்து செல்கிறது என்பது உறுதிப்படுத்தப் பட்டு விட்டது. ஆனால் விஷயம் இத்தோடு முடிந்து விட்டதா என்றால் அது தான் இல்லை. ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்டிருந்த பல ஆய்வுக் கருத்துக்களை மறு பரிசீலனை செய்திட வேண்டிய கட்டாயமான சூழ்நிலை ஒன்று உருவாகி விட்டது.


பேரண்டம் விரிகிறது என்றால் என்ன பொருள்? காலம் செல்லச் செல்ல இப்பேரண்டத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றால் காலத்தால் பின்னுக்குச் செல்லச் செல்ல இப்பேரண்டத்தின் அளவு குறைந்து கொண்டே அல்லவா இருந்திருக்க வேண்டும்! ஆம்! அது உண்மை தான்.


ஒரு காலத்தில் நாம் வாழ்கின்ற இந்த இயற்கைப் பெருவெளியின் அளவு மிக மிகச் சிறியதாகத் தான் இருந்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் - ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இப்பிரபஞ்சம் என்பது ஒரு சிறு புள்ளியாக தனக்குள்ளே இப்பேரண்டத்தினை உருவாக்கக் கூடிய அத்தனைப் பொருட்களுடனும் ஆற்றலுடனும் (matter and energy) திகழ்ந்திருக்க வேண்டும். அதாவது அந்த சமயத்தில் நமது பிரபஞ்சத்தின் கன அளவு பூஜ்யம் என்றும் அதன் அடர்த்தி எல்லையற்றது என்றும் கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே கன அளவு பூஜ்யம் என்பதன் பொருள் என்ன? எதுவுமே இல்லாத நிலை தானே அது! அதாவது - Nothingness!


எனவே - இல்லாத நிலை ஒன்றிலிருந்தே இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. அதாவது இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது! This universe was created!


இல்லாத நிலையிலிருந்து தான் இப்பிரபஞ்சம் படைக்கப்பட்பது என்பது உண்மையானால், இதனைப் படைத்த ஒருவனை ஏற்றுக் கொள்வதில் என்ன கடினம்?


பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory) 

நமது பிரபஞ்சம் மிகப்பெரிய வெடிப்பு ஒன்றின் மூலமே தோன்றியது என்ற கண்டுபிடிப்பு - 20 - ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும். இந்தப் பெரு வெடிப்பை Bing Bang என்றும் இந்த அறிவியல் கோட்பாட்டை Bing Bang Theory என்றும் அழைக்கிறார்கள். சுமார் 15 பில்லியன் (ஆயிரத்து ஐந்நூறு கோடி) ஆண்டுகளுக்கு முன்னால் - மிக மிகச் சிறிய ஒரு புள்ளி அளவில் இருந்த பிரபஞ்சம் - ஒரு வினாடியின் ஒரு சிறு பகுதியிலேயே ஒரு கைப்பந்து அளவுக்குப் பெரிதாகி - முழுவதுமாக ஒரு வினாடி முடிவதற்குள்ளேயே - நமது பிரபஞ்சத்தின் அளவு கோடிக்கணக்கான மைல்கள் அளவுக்கு விரிந்து விட்டது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். இந்தப் பெரு வெடிப்பிற்குப் பின்னரே மிகச்சிறிய அணு முதல் மிகப்பெரிய விண்மீன்கள், விண்மீன் மண்டலங்கள், இன்ன பிற கோள்கள் எல்லாம் உருவானதாம்.


இப்பேரண்டம் தோன்றிய அந்த நேரத்திலேயே இயற்கைச் சட்டங்களும் (Laws of physics)உருவாகி விட்டனவாம். அந்த இயற்கைச் சட்டங்கள், இப்பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே மாதிரியானவையாம். அவற்றில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அவை மாறுவதும் இல்லை! இந்த இயற்கைச் சட்டங்களில் மிக மிகச் சிறியதொரு மாற்றம் இருந்திருந்தாலும் கூட இப்பேரண்டம் முழுவதும் அழிந்தே போயிருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.


அது போலவே, இப்பேரண்டம் விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று சொன்னோம் அல்லவா? அதன் விரிவடையும் வேகம் என்பது கூட ஒரு குறிப்பிட்ட வேகம் தான். அதனை 'ஆபத்தான விரிவடையும் வேகம்' (critical rate of expansion) என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது இப்பேரண்டத்தின் 'வெடித்துச் சிதறும்' இயல்புக்கும் இப்பேரண்டத்தைக் கட்டிப் பிடித்து இழுக்கும் ஈர்ப்பு விசைக்கும் நடுவில் மிகச்சரியான, ஒரு நுணுக்கமான நடுநிலை வேகத்துடன் இப்பிரபஞ்சம் விரிந்து கொண்டிருக்கிறதாம். இப்பேரண்டத்தின் விரிவடையும் வேகம் சற்றே சற்று (அதாவது ஆயிரம் கோடி கோடியில் ஒரே ஒரு பங்கு) அதிகரித்தாலும் சரி, குறைந்தாலும் சரி - நாம் இன்று பார்க்கின்ற இப்பிரபஞ்சம் இன்றைய அளவை எட்டும் முன்னரே சிதறுண்டு அழிந்தே போயிருக்கும் என்கிறார் - இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.


என்றுமே மாறாத இயற்கைச் சட்டங்களைத் தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்டதா இப்பேரண்டம்? தமக்குத் தாமே ஒரு வேகத்தைக் கணக்கிட்டுக்கொண்டு இப்பேரண்டம் விரிகிறதா? இதனைத் 'தற்செயல்' என்று சொல்ல அறிவு இடம் கொடுக்கிறதா?


பொதுவாக - ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறினால் அது அழிவைத் தானே ஏற்படுத்திடும்? சான்றாக அணுகுண்டு ஒன்று வெடித்தால் என்ன நிகழும்? அல்லது எரிமலை ஒன்று வெடித்துச் சிதறினால் என்ன விளைவுகளை அது ஏற்படுத்தும்? அவை பல அபாயகரமான விளைவுகளைத் தானே ஏற்படுத்திடும்! ஆனால் Big bang வெடிப்பு மட்டும் விண்மீன்களையும் கோள்களையும் உருவாக்கி, அவற்றை ஓர் வரையரைக்குட்பட்டு காலம் காலமாக இயங்க வைத்துள்ளதே, அது எப்படி?


ஒரு காலத்தில் நமது பிரபஞ்சம் என்பது இல்லாத ஒன்று. பிறகு ஒரு கட்டத்தில் அது உருவாகிறது! ஓரு ஒழுங்குடனும், குறிப்பிட்ட சட்ட திட்டங்களின்படியும் அது செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இப்பிரபஞ்சத்தின் அளவு என்பது ஒன்றும் சர்வ சாதாரணமான ஒன்றல்ல!


2000 கோடி ஒளி ஆண்டு தூரத்தைக் கடந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது நமது பிரபஞ்சம்.


அது என்ன 'ஒளி ஆண்டு'?


சற்றே நமது பிரபஞ்சத்தின் அளவைக் கணக்கிட்டுப் பார்ப்போமா? ஒரு மில்லி மீட்டரிலிருந்து ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் வரை உள்ள அளவுகளையும் தூரங்களையும் புரிந்து கொள்வதில் நமக்கு எந்த கடினமும் இல்லை. நாம் வாழ்கின்ற பூமியின் விட்டம் 12,756 கி.மீ! இந்த தூரத்தைக்கூட நம்மால் ஊகித்துப் பார்த்திட இயலும்.


ஆனால் நமக்கும் நமது பூமியின் துணைக் கோளான சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 383,000 கி.மீ! இந்த தூரத்தை எப்படி ஊகிப்பீர்கள்?


நமக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 14 கோடியே 95 லட்சம் கி.மீ! எப்படிக் கற்பனை செய்வீர்கள் இந்த தூரத்தை?


இதை விட அதிக தூரங்களை எவ்வாறு அளப்பது? அதற்காகக் கணக்கிடப்பட்ட அளவீடு தான் 'ஒளி ஆண்டு' எனப்படுவது! அதன் தூரம் என்ன? ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 3 லட்சம் கி.மீ! அதாவது ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் ஒளி ஒரு ஆண்டில் சென்றடையும் தூரமே ஒரு ஒளி ஆண்டு ஆகும். அப்படியானல் அது எத்தனை கிலோ மீட்டர்?


300,000 X 60 X 60 X 24 X 365 ) அதாவது 9 லட்சம் கோடி கி.மீ.


இந்த தூரத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா உங்களால்?


சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்பதை நாம் அறிவோம். அது போலவே சூரியன் என்பது milky way galaxy - என்றழைக்கப் படக்கூடிய பால்வளி மண்டலத்தின் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்று தான் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் நமது சூரியனை உள்ளடக்கிய பால்வளி மண்டலத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது தெரியுமா? அவை 20,000 கோடிக்கு மேல்!


நமது பால் வளி மண்டலத்தின் அளவு என்ன தெரியுமா உங்களுக்கு? ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கும் மேல்! கற்பனை செய்து பாருங்களேன் - ப்ளீஸ்!


நான் நமது பால் வளி மண்டலத்தின் வரைபடம் ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு இடத்தில் ஒரு சிறு அம்புக்குறியிட்டு இங்கே எங்கேயோ தான் (solar system is somewhere here!)  சூரிய மண்டலம் அமைந்துள்ளது என்று குறிப்பிடப் பட்டிருந்தது!


சரி, பால் வளி மண்டலத்தைப் போல நமது பேரண்டத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய நட்சத்திர மண்டலங்கள் மொத்தம் எத்தனை தெரியுமா? அதன் எண்ணிக்கையை எப்படிக் குறிக்கிறார்கள் தெரியமா? அவை 'பல ஆயிரம் கோடி விண்மீன் மண்டலங்கள்' என்கிறார்கள்! (There are many hundred billion galaxies in our universe!)


இரண்டு நட்சத்திர மண்டலங்களுக்கிடையேயான சராசரி இடைவெளி என்ன தெரியுமா? ஒரு கோடி ஒளி ஆண்டு தூரம் ஆகும். அப்படியானால் நமது பேரண்டத்தின் மொத்த அளவு எவ்வளவு இருக்கும்? அது இரண்டாயிரம் கோடி ஒளி ஆண்டு தூரத்தைக் கடந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது!!


இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு அமைப்பு தானாகத் தோன்றி - தானாக விரிவடைந்து - தானாகவே எந்த ஒரு கோளாறும் இன்றி கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று இன்றும் சில விஞ்ஞானிகள் அறிவியல் உலகின் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்!


இறை நம்பிக்கைக் கோட்பாட்டை வன்மையாக மறுத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே அவ்வாறு பிடிவாதமாக தற்செயல் கோட்பாட்டை முன் வைக்கிறார்கள். இவர்களையும் உலகம் - அறிவியல் 'அறிஞர்கள்' என்று அழைப்பது தான் வேதனை!


ஒரு பேனாவின் அளவுடன் அந்தப் பேனாவின் முள்ளின் முனையின் அளவை ஒப்பிட்டால் முள்ளின் முனை மிகச்சிறியதே!


அந்தப் பேனாவை வைத்திருக்கின்ற மனிதனோடு ஒப்பிட்டால் பேனாவின் அளவு மிகச் சிறியதாகி விடும்.


அந்த மனிதன் இருக்கின்ற வீட்டுடன் ஒப்பிட்டால் மனித உருவம் சிறியதாகி விடும்.


அந்த வீடு இருக்கின்ற ஊருடன் ஒப்பிட்டால், வீடு சிறியதாகி விடும்.


ஒரு உலக வரைப் படத்தை வைத்துப் பார்த்தால் அந்த ஊரை மிகச்சரியாக சுட்டிக் காட்டிட இயலாது!


அது போலவே - நமது பேரண்டத்தின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பால் வளி மண்டலம் மிகச்சிறியது.


நமது பால் வளி மண்டலத்தின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்பது கோள்களை உள்ளடக்கிய சூரிய மண்டலம் மிக மிகச் சிறியதாகி விடும்.


ஆனால் சூரிய மண்டலத்தின் அளவு என்ன தெரியமா? 1180 கோடி கிலோ மீட்டர்கள்!


இப்போது ஒரு கேள்வி உங்களுக்கு. நமது பிரபஞ்சத்தின் அளவோடு ஒரு மனித உருவத்தின் அளவை ஒப்பிட்டுப் பாருங்கள். என்ன தோன்றுகிறது?

***


சிந்திக்க வேண்டிய இறை வசனங்கள்: 


44:38-39

------------

மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (44:38-39)


3:190-191

-------------

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (3:190)


அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (3:191)

67:5

-----

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம். (67:5)

@@@


Comments