என் தேர்வு - என் உரிமை!



நாம் சிந்தித்து முடிவு செய்கின்ற ஒவ்வொரு தேர்வும் (Choice)

மிக மிக முக்கியமானதே!   


ஏனெனில் - நமது ஒவ்வொரு தேர்வுக்கும் 

ஒவ்வொரு விளைவு இருக்கின்றது!

(Consequence)


நாம் தேர்ந்தெடுக்கின்ற முடிவுகள் 

அவை சிறியதாக இருந்தாலும் சரி,

அல்லது அவை பெரியதாக இருந்தாலும் சரி - 


நமது ஒவ்வொரு தேர்வும் 

ஒவ்வொரு விளைவைக் கொண்டு வந்தே தீரும்  

என்பதை நாம் மறந்து விடக் கூடாது!


மனிதனுக்கும் மற்ற படைப்பினங்களுக்கும்

உள்ள வித்தியாசமே -

ஒன்றைத் தேர்வு செய்கின்ற உரிமை 

நமக்கு வழங்கப்பட்டிருப்பது தான்!

(Freedom to choose)


எனவே நமது ஒவ்வொரு தேர்வும் 

அறம் சார்ந்த, பண்பு சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த 

தேர்வாக அமைந்திட வேண்டும்!  

(Ethical choice / Moral choice)


அறம் சார்ந்த தேர்வுகளுக்கு வழிகாட்டுபவன் - அல்லாஹ்!

அவற்றில் அழகு இருக்கும்! நன்மை இருக்கும்! 

கருணை இருக்கும்! நீதி இருக்கும்!



அறத்துக்குப் புறம்பான தேர்வுகளின் பக்கம் 

நம்மைத் தூண்டுபவன் ஷைத்தான்! 

ஏனெனில் ஷைத்தான் என்பவன்

ஒட்டு மொத்த மனிதர்களின் பொது எதிரி! 


ஷைத்தானின் தேர்வுகள் ஒவ்வொன்றும்  - அழகற்றது, 

அருவறுப்பானது, அநீதியானது, தீமை பயப்பது!


நாம் செய்கின்ற ஒவ்வொரு தேர்வின் போதும் 

ஒன்று - நாம் இறைவனை நெருங்கிச் செல்கிறோம். 


அல்லது - ஷைத்தானின் பக்கம் நெருங்கிச் செல்கிறோம். 


நாம் இறைவனை நெருங்கிச் செல்லும்போது 

இறைவனின் "நண்பனாக" நாம் ஆகி விடுகின்றோம்! 


நாம் ஷைத்தானை நெருங்கிச் செல்லும்போது 

ஷைத்தானின் "நண்பனாக" நாம் ஆகி விடுகின்றோம்!


இந்த இரண்டு நிலைகளுக்கும் நமது தேர்வுகளே காரணம்!


ஷைத்தானை நாம் நம் கண்களால் பார்க்க இயலாது!


ஆனால் - ஷைத்தானின் "நண்பர்களை" நாம் 

நமது கண்களாலேயே பார்த்திட இயலும்!

எப்படி என்கிறீர்களா?


அறத்துக்குப் புறம்பான, பண்புக்குப் புறம்பான, 

நல்லொழுக்கத்துக்குப் புறம்பான ஒன்றைத் 

தேர்வு செய்திட "அழுத்தம்" தருகின்றானா? 

அவன் தான் உண்மையிலேயே ஷைத்தானின் நண்பன்!


இப்படிப்பட்ட "நண்பர்கள்" 

நம் வீட்டுக்குள்ளேயே இருக்கலாம். 

இவர்கள் தருவது "பாரம்பரிய அழுத்தம்"!   


அடுத்து இப்படிப்பட்டவர்கள் 

நமது நட்பு வட்டத்திலேயே கூட இருக்கலாம்!

இவர்கள் தருவது "நட்பு அழுத்தம்"

அதாவது - Peer Pressure. 


பல கட்டங்களில் நமது சமூக அளவில் 

அந்த கூட அழுத்தம் இருக்கலாம்!

அதற்குப் பெயர் - கலாச்சார அழுத்தம்"!


ஷைத்தானின் தேர்வுகள் ஒவ்வொன்றும் 

நம் மானத்தைப் பறித்து விடும்! 

இது இறை மறை சொல்லும் உண்மை!

(Quranic concept)


எனவே - நாம் தேர்வு செய்திடுகின்ற அந்த "உரிமையை"

யாருக்கும் விட்டுத் தந்து விடாதீர்கள்!

அறம் சார்ந்த தேர்வுகளில் உறுதியைக் கடைபிடியுங்கள்!

(Assertiveness)


ஏனெனில் - உங்கள் தேர்வுகள் குறித்து 

நீங்கள் கேட்கப்படுவீர்கள்! (Accountability)


எச்சரிக்கை!


நமது ஒவ்வொரு தேர்வுக்கும் 

ஒரு விளைவு இருக்கிறது!

**

எஸ் ஏ மன்சூர் அலி


Comments