42 சூரா அஸ்-ஷூரா சிந்தனைகள்


 


42 சூரா அஸ்-ஷூரா சிந்தனைகள்


இதுவும் ஒரு "ஹவாமீம்" சூரா ஆகும். அதாவது இந்த அத்தியாயம் ஹா-மீம் என்ற இரண்டு எழுத்துகளுடன் துவங்கும்  அத்தியாயங்களுள் ஒன்றாகும்


இறக்கியருளப்பட்ட வரிசையில் இது - 62 வது அத்தியாயம் ஆகும்.  இது - நபியவர்களின் மக்கத்து வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் இறக்கியருளப்பட்ட அத்தியாயம் ஆகும். 


பொதுவாகவே -ஹவாமீம் அத்தியாயங்களின் உள்ளடக்கம் என்பது - திருமறை திருக்குர்ஆன் சொல்ல வருகின்ற அடிப்படையான கருப்பொருட்களைக் கொண்டதாகும். 


இந்த அத்தியாயத்தைப் பொருத்தவரை இதன் மையக் கருத்து என்பது - "பன்மைத்துவம்" என்று சொல்லலாம். ஆங்கிலத்தில்  - Diversity / Pluralism.


***

This surah talks about a sociological reality of differences among human beings!


***


பின் வரும் இறை வசனங்களே இதற்குச் சான்று: 



1) பன்மைத்துவம் - இறைமைக்கான அடையாளங்களுள் ஒன்று!


42: 29

--------

இந்த வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், இவற்றில் பரந்து காணப்படுகின்ற உயிரினங்களும் அவனுடைய அத்தாட்சிகளுள் உள்ளவையாகும். அவன் விரும்பும்போது அவற்றை ஒன்றுதிரட்டும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான்.


2) முதலில் ஒன்று. அடுத்தது அதற்கான ஜோடி. அதனைத் தொடர்ந்து பரப்பி விடப்படுகின்ற பன்மைத்துவம். பன்மைத்துவத்தின் வரலாறே மனித வரலாறு! 


42:11

-------

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.



3) பன்மைத்துவம் என்பது இறை நாட்டம்!


42:8

------

அல்லாஹ் நாடியிருந்தால், அவர்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாக அமைத்திருப்பான். எனினும், அவன் நாடுகின்றவர்களைத் தன் கருணையில் நுழையச் செய்கிறான். மேலும், கொடுமைக்காரர்களுக்கு எந்தப் பாதுகாவலரும் உதவியாளரும் இலர்.


4) கருத்து வேற்றுமை என்பது இயல்பானது!


42:10

-------

உங்களுக்கிடையே எந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதில் தீர்ப்பு வழங்குவது அல்லாஹ்வின் பணியாகும். அந்த அல்லாஹ்தான் என் அதிபதி. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன்; மேலும், அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.



5) கருத்து வேற்றுமைகளை நீக்க வந்த இறைத்தூதர்கள் பலர்! ஆனால் இறைச் செய்தி ஒன்று தான்!


42:13

-------

 எந்த தீனை வாழ்க்கைநெறியை நூஹுக்கு அவன் வகுத்தளித்திருந்தானோ, மேலும், (முஹம்மதே!) எந்த வாழ்க்கை முறையை உமக்கு நாம் வஹியின் மூலம் அறிவித்திருக்கின்றோமோ, மேலும் எந்த வழிகாட்டலை இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் வழங்கியிருக்கின்றோமோ அதே தீனை வாழ்க்கை முறையைத்தான் உங்களுக்காக அவன் நிர்ணயித்துள்ளான்; இந்த தீனை நிலைநாட்டுங்கள்; இதில் பிரிந்து போய்விடாதீர்கள்(எனும் அறிவுறுத்தலுடன்)! இந்த இணைவைப்பாளர்களை நீர் எந்த விஷயத்தின் பக்கம் அழைக்கின்றீரோ அது அவர்களுக்கு மிகவும் வெறுப்புக்குரியதாய் இருக்கின்றது. தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தனக்குரியவர்களாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும், எவர்கள் அவன் பக்கம் திரும்புகின்றார்களோ அவர்களுக்குத் தன்னிடம் வருவதற்கான வழியை அவன் காண்பிக்கின்றான்.


***


6) பிரிவினைக்கு இதுவும் ஒரு காரணம்! 


42:14

-------

அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.


***


7) தாயின் கருவறையிலிருந்து.... 


42:49

------

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.


42:50

-------

அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.


8) பல்வேறு கருத்துகளில் சிறந்ததைத் தேர்வு செய்திடவே "கலந்தாலோசனை" (consultation) எனும் ஷூரா!இதுவே இந்த அத்தியாயத்தின் தலைப்பு!


42:38

--------

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.


The purpose of shura is to bring the best opinion out of diverse opinions! The purpose of diversity is to bring the best out of a collectivity.  


9) பன்மைத்துவம் ஓர் அருட்கொடை - ஒரு ரஹ்மத்!


42:29

--------


மக்கள் நிராசை அடைந்த பின்னர் மழையைப் பொழிவிப்பவனும் அவனே; மேலும், தன் "கருணையைப் பரப்புகின்றான்". அவனே மிகப் பெரும் புகழுக்குரிய பாதுகாவலன் ஆவான்.



மேலும் சிந்திப்போம்!


@@@

Comments