சூரா அல் ஃகாஃபிர் சிந்தனைகள்


சூரா அல் ஃகாஃபிர் சிந்தனைகள் 


அத்தியாயம் எண் 40 

----

சூராவின் கருப்பொருள்: அல்லாஹ்  - மன்னிப்பதில் மிகத் தாராளமானவன்! 


பின் வரும் இறை வசனத்தில் இந்த அத்தியாயத்தின் கருப்பொருள், மையக்கருத்து பொதிந்துள்ளது.  


40:3

------

பாவத்தை மன்னிப்பவன்; பாவமன்னிப்புக் கோரி மீளுவதை ஏற்றுக் கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன்; அருட்பேறு உடையவன்! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டி யிருக்கிறது. (IFT)


Who forgiveth sin, accepteth Repentance, is strict in punishment, and hath a long reach (in all things). there is no god but He: to Him is the final goal. (Yusuf Ali) 


இவ்வசனத்தில் வருகின்ற ஒரு சொற்பிரயோகம் - ஃதித் தவ்ல் (dhi al tawl). ஆனால் திருக்குர்ஆன் தமிழ்  மொழிபெயர்ப்புகளில் இச்சொற்றொடருக்கு சரியான மொழிபெயர்ப்பு காணப்படவில்லை. 


அல்லாமா யூசுப் அலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இச்சொல் - hath a long reach - என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இச்சொல் - திருமறையின் வேறு எந்தவொரு இடத்திலும் இடம்பெறவே இல்லை என்பது கவனிக்கத் தக்கது.   


***


பொதுவாகவே - திருக்குர் ஆன் ஒரு கருத்தை எடுத்து முன் வைத்தால் - அதற்கு வலு சேர்க்கும் விதமான ஆதாரங்களை எடுத்துரைப்பது அதன் வழிமுறை!.  Methodology of the Quran. 


இறைவன் - மனிதர்களை மன்னிப்பதில் மிகத் தாராளமானவன் என்ற கருத்தைச் சொல்ல வருகின்ற இந்த அத்தியாயம் - வரலாற்று ரீதியாக ஒரு இறைத்தூதரின் சமூகத்தை எடுத்துச் சொல்ல முன் வந்தால் இந்த இடத்தில் எந்த நபியைக் குறிப்பிட்டுக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்? 


நபி நூஹ் (அலை) அவர்களைத்  தானே? 


வசனம் எண் - 5- ஐப் பாருங்கள்.   


40: 5

------

இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும்  பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?


***


மையக்கருத்தின் வழிமுறையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் - - மேலே எடுத்துக் காட்டப்பட்ட இரண்டு இறை வசனங்களையும் இணைத்துப் பார்த்திட இயலாது!


***

படிப்பினை 1

ஒருவருக்கு நீண்ட ஆயுள் கொடுக்கப்படுவதற்குக் காரணம் அவர் தவ்பா செய்து இறைவனின் பக்கம் திரும்பிட மாட்டாரா என்ற இறைவனின் கருணையே தான்!  


இன்ஷா அல்லாஹ் தொடர்வோம். 

Comments