11 சூரா - ஹூத் - சிந்தனைகள்



ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழவே ஆசைப்படுகிறான். ஆனால் நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகளை இவ்வுலகிலேயே அவனால் காண இயலாத பொழுது விரைவிலேயே அவன் நல்லவற்றின் மீதே நம்பிக்கை இழந்து விடுகிறான். இந்த நிலை ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு இல்லை! ஏனெனில் மறுமையில் கேள்வி கணக்கு நிச்சயம் உண்டு என்ற  அவனது நம்பிக்கையினால் - அவன் நல்லவற்றில் மீது இறுதிவரை உறுதி காட்டுகிறான்!


மறுமை நம்பிக்கையற்ற "நல்லவன்" நல்லவற்றின் மீது நிலைத்து நிற்க இயலாதவனாக மாறி தீமையை நியாயப் படுத்தத் தொடங்கிவிடுகிறான்! 


இதுதான் வித்தியாசம்! இதுவும் ஒரு மனித உளவியல் தான்! 


***

அது போலவே - மறுமை நம்பிக்கையற்ற அந்த "நல்லவன்" - முதலில் தீமைகளைத் தீமைகள் என்றே அடையாளம் கண்டு வந்தான். ஆனால் தீமைகளுக்கு எந்த தண்டனையும் இங்கே இல்லையே என்று கண்டவுடன் - தீமைகள் குறித்த அவன் பார்வையும் மாறத் தொடங்கி விட்டது! விளைவு? இப்போது அவனும் தீமையின் பக்கம்!  


பார்க்க சிந்திக்க....


11:8

------

ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் அவர்களுடைய தண்டனையை தாமதப்படுத்தினால் அதனைத் தடுத்து வைத்திருப்பது எது? என்று கேட்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அத்தண்டனை அவர்களிடம் வந்துவிடும் நாளில் அவர்களை விட்டு அதனை யாராலும் தடுத்துவிட முடியாது! மேலும், எதனை அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்!


@@@



Comments